இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 836.34 அல்லது 1.04% புள்ளிகள் சரிந்து 79,541.79 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 284.70 அல்லது 1.16% புள்ளிகள் சரிந்து 24,199.35 ஆகவும் வர்த்தகமாகியது.
இந்திய பங்குச்சந்தை கடந்த ஒரு மாதமாகவே சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதன் எதிரொலியாக பங்குச்சந்தை நேற்றைய வர்த்தக நேரத்தில் ஏற்றம் கண்டது.
இந்திய பங்குச்சந்தையில் ஊடக நிறுவன பங்குகளை தவிர மற்றவை எல்லாம் சரிவில் இருந்தது. வங்கி, நிதி, ஆட்டோமொபைல், ஐ.டி. என அனைத்து துறைகளும் வீழ்ச்சி கண்டன.
அமெரிக்கா ஃபெடரல் வங்கி கொள்கை:
அமெரிக்க ஃபெடரல் வங்கி கொள்கை குறித்த அறிவிப்பு வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாகிறது. 25 பேசிஸ் பாயின்ட் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், பணவீக்கம் உயரும் பட்சத்தில் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பில்லை என தெரிகிறதால் முதலீட்டாளர்கள் சற்று கவனமுடன் வர்த்தகத்தை கையாள இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப் ‘America First’ என்பதை நோக்கமாக கொண்டுள்ளதால் தொழில்துறை சார்ந்து வளர்ச்சி இருக்கும், பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படும் என்பதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையில் உள்ளனர். இருப்பினும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு 60% வரியும் மற்ற நாடுகளில் இருண்டு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10-20% வரியும் விதிக்கும் முடிவு எடுத்தால் அது பணவீக்கத்தை அதிகரிக்கும் நிலை உள்ளது. அப்படி இருக்கும்போது Fed வட்டி விகித குறைக்கப்பட வாய்ப்புகளும் இல்லாமல் போகும் என்ற அச்சமும் இருப்பதால் பங்குச்சந்தை சரிவுடன் இருக்க காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:
அப்பல்லோ மருத்துவமனை, எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், டி.சி.எஸ்., லார்சன் ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது.
ஹிண்டாலோ, ட்ரண்ட், ஸ்ரீராம் ஃபினான்ஸ், க்ரேசியம், டெக் மஹிந்திரா, அதானி எண்டர்பிரைசிஸ், டாடா மோட்டர்ஸ், சன் ஃபார்மா, அல்ட்ராடெக் சிமெண்ட், இந்தஸ்லேண்ட் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஜெ.எஸ்.டபுள்யு., ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, டைட்டன் கம்பெனி, பவர்கிர்ட் கார்ப், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டர்காஃப், ரிலையன்ஸ், எம்&எம், பஜாஜ் ஃபினான்ஸ், பாரதி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி., என்.சி.பி.சி., அதானி போர்ட்ஸ், இன்ஃபோசிஸ், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், சிப்ளா, பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்.யு.எல்,, கோடாக் மஹிந்திரா, ஈச்சர் மோட்டர்ஸ், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ஐ.டி.சி., பி.பி.சி.எல்., ஆக்ஸிஸ் வங்கி, நெஸ்லே, பாரத் எலக்ட்ரானிக்ஸ், மாருதி சுசூகி, ஹெச்.சி.எல்., டெக், பிரிட்டானியா, கோல் இந்தியா, விப்ரோ ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.