இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. பங்குச்சந்தை 2024, செப்டம்பர் மாதம் முதல் சரிவடைந்து வருகிறது.
இந்திய பங்குச்சந்தை (24.02.2025) மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 856,66 அல்லது 1.14% புள்ளிகள் சரிந்து 74,454.41 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 243.40 அல்லது 1.07% புள்ளிகள் சரிந்து 22,552.50 ஆகவும் வர்த்தகமாகியது. சென்செக்ஸ், நிஃப்டி, இரண்டும் ஒரு சதவீதம் சரிந்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இது உலக அளவில் வர்த்தகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்கன் கன்ஸ்யுமர் கான்ஃபிடன்ஸ் ரேட் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதம் கடுமையான சரிவை எட்டியது. அமெரிக்காவின் பணவீக்கம் தொடர்பான கவலையும், அமெரிக்க அதிபரின் வரி விதிப்பும் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. இது பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:
எம்&எம், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், ஈச்சர் மோட்டர்ஸ், ஹீரோ மோட்டர்கார்ப், கோடாக் மஹிந்திரா, ட்ரெண்ட், நெஸ்லே, ஐ.டி.சி., மாருதி சுசூகி, ஆக்சிஸ் வங்கி, பாரத் எலக்ட்ரிக்கல்ஸ், சிப்ளா ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது.
விப்ரோ, ஹெச்.சி.எல்., டெக், டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், பாரதி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி., டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, என்.டி.பி.சி., ஹிண்டால்கோ, லார்சன், ஜெ.எஸ்.டபுள்யு. ஸ்டீல், க்ரேசியம், இந்தஸ்லான் வங்கி, கோல் இந்தியா ஸ்ரீராம் ஃபினான்ஸ், அதானி போர்ட்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ், அப்பல்லோ மருத்துவமனை, பவர்கிரிட் காஃப், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெ.டி.எஃப்.சி. லைஃப். அதானி எண்டர்பிரைசிஸ், எஸ்.பி.ஐ., பிரிட்டானியா, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபினான்ஸ், சன் ஃபார்மா, டைட்டன் கம்பெனி, டாடா கான்ஸ் ப்ராட், ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.
தொடர் சரிவில் பங்குச்சந்தை:
இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. 2024, செப்டம்பர் முதல் பங்குச்சந்தை தொடர்ந்து சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இதற்கு முன்னர், 1996-ல் ஜூலை முதல் நவம்பர் வாரை ஐந்து மாதங்கள் இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிவடைந்தது.
அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகள் விற்பனை (FPI):
அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். அக்டோபர், 2024 முதல் விற்பனை தொடர்கிறது. US bond yields, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு, ஃபெரட்ல் வட்டி விகிதம் குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடாதது ஆகிய காரணங்களால் விற்பனை செய்வது தொடர்கிறது. 2024- 2025 நிதியாண்டில் மட்டும், பிப்ரவரி,21-ம் தேதி வரை ஈக்விட்டிஸ், மியூட்சுவல் ஃபண்ட்ஸ் என ரூ.16,06, 492 கோடி அளவு பங்குகளை அவர்கள் விற்பனை செய்துள்ளனர்.
பங்குச்சந்தையின் தொடர் சரிவு குறித்து வல்லுநர்கள் தெரிவிக்கையில், “ உலக அளவில் இருக்கும் பொருளாதார சூழல், அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு முறை ஆகியவை காரணமாக வரும் மாதங்களில் பங்குச்சந்தை எற்ற, இறக்கத்துடன் இருக்கும்.” என்று தெரிவிக்கின்றனர்.