Share Market Opening Bell: இந்திய பங்குச்சந்தை மூன்றாவது நாளாக சரிவுடன் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 128.90 அல்லது 0.21 % புள்ளிகள் சரிந்து 61,431. 74 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 51.80 அல்லது 0.28% புள்ளிகள் சரிந்து 18,129.95 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
சாந்தி ஓவர்சீஸ், அன்லன் டெக்னாலஜி, ரெம்சன் இதியா, செல், ஜி.பி.டி. இன்ஃப்ரா, இண்டிகோ பெயிண்ட்ஸ், பால்ரெட் டெக், பஜார்ஜ் ஃபின்சர்வ், பாரதி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.சி.எல்., ஹூரோ மோட்டர்கார்ப், விப்ரோ, ஹெச்.டி.எஃப்.சி. உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
சரிவுடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்
டிவிஸ் லேப்ஸ், அதானி போர்ட்ஸ், எஸ்.பி.ஐ., ஐ.டி.சி., டைட்டன் கம்பெனி, பிரிட்டனியா, ஈச்சர் மோட்டார்ஸ், லர்சன், எம் அண்ட் எம், டாடா மோட்டர்ஸ், பவர்கிரிட் கார்ப், டாக்டர் ரெட்டி லேப்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், சிப்ளா, அப்பலோ மருத்துவமனை, மாருதி சுசூகி, டெக் மகிர்ந்திரா, பாஜார்ஜ் ஆட்டோ, நெஸ்லே, , ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.
இந்த வார தொடக்கத்தில் இருந்தே இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக வர்த்த நேர முடிவில் பங்குகளின் மதிப்பு சரிவடைந்தன. இது முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று காலை ஏற்றத்துடன் வர்த்தகமான பங்குகள் மாலை சரிவுடன் நிறைவடைந்தது. சுகாதாரத்துறை பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.
மேலும் வாசிக்க..
Modern Love Chennai: மாடர்ன் லவ்: எப்படி இருக்கு 'காதல் என்பதே கண்ணுல ஹாட் இருக்கிற எமோஜி' எபிசோட்?