இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,377.21 அல்லது 1.80% புள்ளிகள் சரிந்து 78,313.17 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 457.70 அல்லது 1.88% புள்ளிகள் சரிந்து 23,843.90 ஆகவும் வர்த்தகமாகியது.
இந்திய பங்குச்சந்தை கடந்த ஒரு மாதமாகவே சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. நவம்பர் மாதம் இரண்டாவது வார தொடக்கத்திலேயே பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகியது. பங்குச்சந்தை கடும் சரிவுடன் வர்த்தகமானது முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் 1% சரிவடைந்துள்ளது. பி.எஸ்.இ.-ல் மிட்கேப், ஸ்மால்கேப் ஆகியவை 2 சதவீதம் சரிவை சந்தித்தது. பங்குச்சந்தையில் BSE - லிஸ்டட் நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.448 லட்சம் கோடியில் இருந்து ரூ.439 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவால் ரூ.9 லட்சம் கோடி மதிப்பை ஒரு செசனிலேயே முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டோனால்டு ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேந்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு விவரங்கள் இருவருக்கும் இடையே உள்ள் போட்டியை உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களும் பங்குச்சந்தை அமெரிக்க தேர்தல் நிலையை பொறுத்து வர்த்தகமாகும் என பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா ஃபெடரல் வங்கி கொள்கை:
அமெரிக்க ஃபெடரல் வங்கி கொள்கை குறித்த அறிவிப்பு வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாகிறது. 25 பேசிஸ் பாயின்ட் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை விற்பனை செய்வது, அமெரிக்க அதிபர் தேர்தல் ஒட்டிய நிலையின்மை ஆகியவை காரணமாக பங்குச்சந்தை சரிவுடன் இருக்கிறது. Foreign Institutional Investors (FIIs) இந்திய பங்குச்சந்தை கடந்த ஒரு வாரத்தில் ரூ.3,228.08 கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:
எம்&எம், டெக் மஹிந்திரா, சிப்ளா, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது.
ஹீரோ மோட்டர்கார்ப், பஜாஜ் ஆட்டோ, பி.பி.சி.எல்., சன் ஃபார்மா, ஹிண்டாலோ, கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், க்ரேசியம், என்.டி.பி.சி., ரிலையன்ஸ், டாடா மோட்டர்ஸ், டாடா ஸ்டீல், விப்ரோ, பவர்கிரிட், காஃப், ஈச்சர் மோட்டர்ஸ், டாடா கான்ஸ் ப்ராட், என்.எஸ்.டபுள்யு, ட்ரெண்ட், பாரதி ஏர்டெல், பிரிட்டானியாஅ, பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன் கம்பெனி, அதானி எண்டர்பிரைசிஸ், நெஸ்லே, பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஆக்சிஸ் வங்கி, லார்சன், மாருதி சுசூகி, எஸ்.பி.ஐ,. லைஃப் இன்சுரா, ஹெச்.டி.எஃப்.சி., பஜாஜ் ஃபினான்ஸ், ஐ.டி.சி., டி.சி.எஸ்., எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, அதானி போர்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், கோடாக் மஹிந்திரா வங்கி, ஹெச்.டி.எல். டெக் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.