மதுரையை மையமாகக் கொண்டு தமிழ்நாடு சட்டமன்ற கிளை தொடங்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது. அரசியலுக்கு சென்னை தலைநகரம் கிடையாது, அரசியலுக்கு தலைநகரம் மதுரை தான் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 


பாஜக வாரிசு அரசியலில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.


 

பா.ஜ.க., மாவட்ட தேர்தல் குழு பயிலரங்கம் மதுரையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். தொடர்ந்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினின் ஆளுமையை தமிழ்நாடு மக்கள் பார்க்க வேண்டியது கட்டாய தேவை. அரசியலில் வாரிசு அரசியல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் மற்றும் பிரியங்கா காந்தியின் தேர்தல் குறித்து பேசுவாரா, காங்கிரஸில் அடுத்த தலைவர் இறக்கப்பட்டு தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இவ்வளவு கேவலமான நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தை விட்டால் வழியில்லை என்ற நிலைக்கு காங்கிரஸ் மற்றும் திமுக போய்விட்டது. இதேபோல் பல அரசியல் கட்சிகளும் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் பாஜக வாரிசு அரசியலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

 

ஒரு நாடு ஒரு தேர்தல் குறித்து தவெக தீர்மானம் குறித்த கேள்விக்கு.

 

ஒரு தேர்தலும் சந்திக்காத த வெ க தலைவர் விஜய் எந்த அனுபவத்தின் அடிப்படையில் இதனை கூறுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசு பல கோடி செலவு செய்கின்றனர். இதனை குறைக்க வேண்டியது அரசியல் கட்சி மற்றும் மக்களின் கடமை. அந்தந்த மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது நிலைபாட்டை மாற்றி, ஒரே நாடு ஒரே தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களது வெற்றியை சொல்ல முடியும். விஜயின் தீர்மானம் தவறானது. 

 

2026 இல் த வெ க ஆட்சி அமைத்தால் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற கேள்விக்கு ?

 

 மக்களிடையே இது குறித்து எந்த வரவேற்பும் இருக்காது. அரசியல் கட்சிகள் மத்தியில் வரவேற்பை பெறலாம். கூட்டணியில் இருந்தால் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொடுக்க வேண்டும்.  ஆனால் அந்த மன நிலையில் தமிழ்நாடு அரசாங்கம் இல்லை. பாரதிய ஜனதா கட்சி அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியிலும் பங்கு  என்பதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. விஜய் அவர்கள் வார்த்தையை சொல்லும் முன்பாக அதனை ஏற்றுக் கொண்டு யார் செல்வார்கள் என்பதை மனதில் பதிய வைத்த பின்பு கூறியிருப்பார் என்று எண்ணுகிறேன். மதுரையை மையமாகக் கொண்டு தமிழ்நாடு சட்டமன்ற கிளை தொடங்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது.  அரசியலுக்கு சென்னை தலைநகரம் கிடையாது, அரசியலுக்கு தலைநகரம் மதுரை தான். உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்று திமுக அரசு எந்த அடிப்படையில் கோரிக்கை வைக்கிறது. அதனை கேட்கக்கூடிய உரிமை தமிழகத்திற்கு இருக்கும் என்றால், தமிழின் தலைநகரம் மதுரையில் ஏன் சட்டசபை வளாகத்தை அமைக்க கூடாது. வரக்கூடிய தேர்தலில், விஜய்க்காக கூறவில்லை, பாஜகவை பொறுத்தவரை மதுரையை மையமாக வைத்து தமிழக சட்டசபையின் துணை அலுவலகம் செயல்பட வைக்கக் கூடிய வகையில் பாஜக குரல் கொடுக்கும். த வெ க ஆட்சி அமைத்தால் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் கிளை மதுரையில் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார். அதனை வரவேற்கும் விதமாக பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கோரிக்கை வைத்தார்.