இந்திய பங்குச்சந்தை இன்று காலை மிகவும் இறக்கத்துடன் தொடங்கியது. இருப்பினும், வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இன்று காலை நிலவரப்படி பி.எஸ்.இ. சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை குறைந்தது.
சென்செக்ஸ் சுமார் 37.87 புள்ளிகள் அல்லது உயர்ந்து 60,298.00 புள்ளிகளில் உள்ளது. அதேபோல் நிஃப்டி சுமார் 12.25 புள்ளிகள் அல்லது வரை உயர்ந்து 17,956.50 புள்ளிகளில் உள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு மீண்டும் 60,000 புள்ளிகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை காலை நிலவரம்:
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் 60,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமானது. நேற்று 60,260.13 புள்ளிகளுடன் நிறைவுற்ற பி.எஸ்.இ. சென்செக்ஸ் இன்று காலை 60,080.19 என்ற புள்ளிகளுடன் தொடங்கியது.
சென்செக்ஸ் 125 புள்ளிகள் குறைந்து 60,135.12 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 26.65 புள்ளிகள் குறைந்து 17,917.60 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.
பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாக கோடாக் மஹிந்திரா வங்கி, எல் அண்ட் டி நிறுவனம், பாரதி ஏர்டெல், பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. மற்றும் ஐ.டி.டி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக புள்ளிகளுடன் விற்பனையானது காரணம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்