கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பான் எண்ணுடன் (PAN NUMBER) ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது . அதன் பிறகு அதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது. கடந்த மாதம், செப்டம்பர் 30 வரையில் பான் இணைப்பிற்கான அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. குடிமக்கள் முறையான வரி செலுத்தும் வரையறைக்குள் வருவதற்காகவே இந்த ஆதார் மற்றும் பான் எண் இணைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரபல ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தனது வாடிக்கையாளர்கள் யாரேனும், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இணைக்க தவறினால், அவர்கள் வங்கியின் இடையூறு மற்றும் தொந்தரவுகளை சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளது.
மேலும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் எண்ணினை இணைக்காத வாடிக்கையாளர்களின் கணக்குகள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139AA இன் பிரிவு 41 ன் படி முடக்கப்படும் என்றும் எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது. வரி ஏய்ப்பு போன்ற பிரச்சனைகளை தவிர்க்க வங்கிகளில் பான், ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ட்விட்டர் வாயிலாக எஸ்.பி.ஐ இந்த அறிவிப்பை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது எப்படி ?
- www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.
- பிறகு Link Aadhaar with PAN என்ற வசதிக்குள் செல்லுங்கள். பிறகு தோன்றும் திரையில் , பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி), மொபைல் எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
- ஆதாரில் பிறந்த தேதி ம இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், ’I have only year of birth in Aadhaar Card ’என்பதை டிக் செய்யவும்.
- பின்னர் கொடுக்கப்பட்ட விவரங்களை இறுதியாக சரிபார்த்து’ I agree to validate my Aadhaar details with UIDAI ’என்பதை கிளிக் செய்யவும்
- பிறகு தோன்றும் திரையில் Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து அல்லது மொபைல் எண்ணின் வாயிலாக ஓடிபியை பெற்று , அதனை பதிவேற்றிய பிறகு Link Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் ஆதார் எண்ணுடன் பான் எண் இணைந்துவிடும் , இதனை மீண்டும் அதே இணையதளத்தில் Link Aadhaar பக்கத்தில் view status என்பதை கிளிக் செய்து பான் மற்றும் ஆதார் எண்ணை டைப் செய்து உறுதி செய்து கொள்ள முடியும்.