இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு நாடு முழுவதும் 22,224 வங்கிக் கிளைகளும் 63,906 ஏடிஎம் மையங்களும் உள்ளன. இவர்கள் எப்போதும் தங்களது பயனர்களின் பாதுகாப்புக்காக பல முன்னெடுப்புகளை எடுக்கும். இந்நிலையில், ஏடிஎம் மெஷினில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மேலும் கடுமையாக்கியுள்ளது. ஏடிஎம் பரிவர்த்தனைகளில் நடைபெறும் மோசடிகளைக் கட்டுப்படுத்தவும், பணப் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பானதாக மாற்றவும்  இந்த விதிமுறைகளை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கொண்டுவந்துள்ளது.


பாதுகாப்பு அதிகரிப்பு


ஏடிஎம்களில் அதிகரித்து வரும் வங்கி மோசடிகளை சமாளிக்க, ஸ்டேட் வங்கி புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. அதில் ஒன்று வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுதாரர்களைப் பாதுகாப்பதற்காக டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் தேவைப்படுகிறது. பணம் எடுப்பவருக்கு ஒரு முறை கடவுச்சொல் அதாவது ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP) அடிப்படையிலான முறை கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலம் SBI ATM இல் பணம் எடுக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் OTP ஐ உள்ளிட வேண்டும் என்ற விதி வந்துள்ளது.






10,000 மேல் பணமெடுக்க OTP


10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் யாராக இருந்தாலும், அவர்கள் இந்த புதிய முறையை பயன்படுத்தி தான் எடுக்க வேண்டும். இதன் மூலம் தானியங்கி வங்கிகளான ஏடிஎம்-இல் பணம் எடுக்கும் முறை இன்னும் கடுமையாக்கப் பட்டுள்ளது. அதனால் தற்போது பணம் எடுக்க விரும்புபவர்கள் தங்களது நான்கு இலக்க பின் நம்பரோடு, OTP எனப்படும் பேங்க் மொபைல் நம்பருக்கு அனுப்பும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பாஸ்வேர்டையும் உள்ளிட்ட வேண்டும். இந்த பாதுகாப்பு முறை, பயனர்களின் பணத்திற்கு மேலும் ஒரு லேயர் பாதுகாப்பு வழங்குவதாக கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்: Vijay Sethupathi : "என் வாழ்க்கையிலயும் ஒரு ஜானு இருந்தாங்க...." : ஃப்ளாஷ்பேக் சொல்லி உருகிய விஜய் சேதுபதி..


SBI ட்வீட்


"எஸ்பிஐ ஏடிஎம்களில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான எங்கள் OTP அடிப்படையிலான முறை, மோசடி செய்பவர்களுக்கு எதிரான தடுப்பூசி ஆகும். மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாப்பதே எங்களின் முதன்மையான வேலையாக இருக்கும்" என்று எஸ்பிஐ இந்த ஆண்டின் தொடக்கத்தில் ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.






OTP-ஐப் பயன்படுத்தி SBI ATM களில் இருந்து பணத்தை எடுப்பது எப்படி?



  • வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்ட என்னுள்ள சிம் கார்டு கொண்ட உங்கள் மொபைல் ஃபோனை, ATM கார்டோடு ATM-ற்கு கொண்டு வர வேண்டும்.

  • உங்கள் டெபிட் கார்டை ஏடிஎம் மெஷின் ஸ்லாட்டில் செருகி, உங்கள் நான்கு இலக்க பின்னை உள்ளிடவும்.

  • மேலும் உங்களுக்கு தேவையான, ரூ. 10000க்கு அதிகமான தொகையைக் உள்ளிடவும்.

  • தற்போது OTPஐ உள்ளிடச்சொல்லி ATM இயந்திரம் உங்களைக் கேட்கும்.

  • இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் SMS மூலம் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட வேண்டும்.

  • சரியான OTP எண்-ஐ உள்ளிடும்போது உங்கள் பரிவர்த்தனை முடிவடையும், நீங்கள் கோரிய பணத்தை பெறலாம்.


SBI ஆரம்பத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு மட்டும் இந்த வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது, செப்டம்பர் 2020 முதல், இந்த வசதி 24 மணிநேரம் கிடைக்கும் என்று ட்வீட் செய்துள்ளது. மேலும் இந்த வசதி SBI ஏடிஎம்-களில் மட்டுமே கிடைக்கும் என்று அழுத்தமாக கூறி உள்ளது. மற்ற வங்கிகளும் இதனை பின்தொடரும் முயற்சியில் இருப்பதால் இந்த விஷயத்தை அழுத்தமாக கூறி உள்ளது SBI வங்கி. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.