நாடு முழுவதும் கொரோனா தொற்று பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில் இதனை கட்டுக்குள் கொண்டுவர சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது, ஊரடங்கு போன்றவை ஒரு தீர்வாக உள்ளது. இந்நிலையில் மக்களால் அதிகம் பயன்படுத்தக்கூடிய ஒரு பொது இடங்களில் ஒன்றாக வங்கிகள் செயல்பட்டுவருகிறது. இந்த பெருந்தொற்று சமயத்தில் சமூக இடைவெளி மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்களிடையே கொண்டு செல்லும் விதமாக சமீபத்தில் மக்களுக்கு மிகவும் பயன்பெறக்கூடிய ஒரு அறிவிப்பினை பாரத் ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
முன்பெல்லாம் நாம் ஒரு இடத்தில் பணிபுரிந்து விட்டு சொந்த ஊருக்கு சென்றால் நம்முடைய வங்கி கணக்கினை அங்கு மாற்றம் செய்ய வங்கிகளில் கால் கடுக்க நிற்க வேண்டிருக்கும். ஆனால் இதற்கு இனி எந்த அவசியம் இல்லை எனவும், இந்த கொரோனா தொற்று சமயத்தில் நம் கையில் மொபைல்ஃபோன் மற்றும் வங்கியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மொபைல் எண் இருந்தாலே போதும் என்கிறது எஸ்பிஐ வங்கி நிர்வாகம். மேலும் எப்படி இதனை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பினையும் தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் YONO SBI, YONO Lite and OnlineSBI போன்ற செயலிகளை பயன்படுத்தி ஒரு வங்கி கிளையிலிருந்து மற்றொரு வங்கி கிளைக்கு சேமிப்பு கணக்கினை மாற்றலாம் என தெரிவித்துள்ளது. சமூக இடைவெளி மற்றும் டிஜிட்டல் சேவைக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை தற்போது மேற்கொண்டுள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆன்லைனில் எப்படி இந்த செயலிகளை பயன்படுத்தலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்!
YONO SBI செயலி வழியாக வங்கி கணக்கினை மாற்றுவது எப்படி?
1. முதலில் தொலைபேசியில் YONO SBI பயன்பாட்டில் உள்நுழைய வேண்டும்.
2. பிறகு சேவைகள் (Service) விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
3. அதில், சேமிப்பு கணக்கின் பரிமாற்றம்( transfer) விருப்பத்திற்கு செல்லவும்.
4. பின்னர் சேமிப்பு கணக்கினை தேர்ந்தெடுக்க வேண்டும், அதனைத்தொடர்ந்து மாற்றம் செய்ய விரும்பும் புதிய கிளைக்குறியீட்டினை ( branch code) வழங்க வேண்டும். பின்னர் கிளை பெயரினை கிளிக் செய்தால் புதிய கிளையின் பெயரினை நம்மால் காண முடியும்.
5. இதனைத்தொடர்ந்து மாற்றம் செய்ய விரும்பும் வங்கிக்கிளை சரியாக இருக்கும் பட்சத்தில் அதனை submit செய்ய வேண்டும்.
SBI website யை பயன்படுத்தி வங்கிக்கணக்கினை மாற்றுவது எப்படி?
1) உங்கள் யூசர் பெயர் மற்றும் பாஸ்வேர்ட்டை பயன்படுத்தி www.onlinesbi.com இல் உள்நுழைந்து ‘தனிப்பட்ட வங்கி’ டேபுக்குச் செல்ல வேண்டும்.
2) பின்னர் (e-service) மின் சேவையினை கிளிக் செய்யவும்.
3) அதனையடுத்து சேமிப்பு கணக்கின் பரிமாற்றம் ( transfer saving account) தேர்ந்தெடுத்து வங்கி எண் மற்றும் கிளை பெயர் போன்ற உங்களுடையே கணக்கு விபரங்களை காணலாம்.
4) அதன்பின்னர் மாற்றம் செய்ய விரும்பும் கணக்கினை தேர்ந்தெடுத்து, மாற்ற விரும்பும் புதிய கிளையின் குறியீட்டினை வழங்க வேண்டும்.
5) இதனையடுத்து மாற்ற செய்யவிருக்கும் வங்கி கிளையில் பெயரினை பெற்றவுடன் அதனை கிளிக் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
6) பின்னர் தற்போதுள்ள மற்றும் மாற்றம் செய்த புதிய கிளைக்குறியீடுகளை பயன்படுத்தி கணக்கு பரிமாற்ற விபரங்களை சரிபார்த்துக்கொள்வது அவசியம்
7) பின்னர் confirm button யை கிளிக் செய்த பின்னர், வங்கியில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பபடும்.
8) இறுதியாக OTP எண்ணினை பதிவு செய்து confirm பட்டனை கிளிக் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிக்கணக்கினை வேறொரு கிளைக்கு மாற்றம் செய்த பின்னர் ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும் என்று வங்கிக்கு வரத்தேவையில்லை என எஸ்பிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மாற்றம் செய்யப்பட்டுள்ள வங்கி கிளைக்கு தேவையான முகவரி மற்றும் அடையாளத்திற்கான சான்றுகளை வங்கி கிளைக்கு மின்னஞ்சல் மற்றும் கூரியர் மூலம் சமர்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI Announcement: இனி வங்கிக்கு செல்லாமலே சேமிப்பு கணக்கை ஆன்லைனில் மாற்றலாம் - எஸ்பிஐ அறிவிப்பு! எப்படி விண்ணப்பிக்கலாம்?
ABP NADU
Updated at:
14 May 2021 05:19 PM (IST)
இந்த பெருந்தொற்று சமயத்தில் சமூக இடைவெளி மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்களிடையே கொண்டு செல்லும் விதமாக சமீபத்தில் மக்களுக்கு மிகவும் பயன்பெறக்கூடிய ஒரு அறிவிப்பினை பாரத் ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
எஸ்பிஐ
NEXT
PREV
Published at:
14 May 2021 05:01 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -