ருச்சி சோயா (Ruchi Soya) நிறுவனத்தின் பங்குகள் 19 சதவீதம் சரிந்துள்ளது. இந்நிறுவனம்  ஃபால்ப் ஆன்  பப்ளிக் ஆஃப்ரிங்கிற்கான (follow-on public offering (FPO) பங்கு விகிதத்தை அறிவித்தவுடன், நேற்றைய வர்த்தக நேரத்தில் ருச்சி சோயா நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்தன.


ருச்சி நிறுவனம் 6,61,53,846 ஈக்விட்டி பங்குகளுக்கு தலா ரூ.2 ஃபேஸ் வேல்யூ உடன்  ஃபால்ப் ஆன்  பப்ளிக் ஆஃப்ரிங்கிற்காக ஒதுக்கீடு செய்தது. இதன் மூலம் ரூ.4,300 கோடி திரட்டியுள்ளது.


இந்நிறுவனம், ஒரு பங்கின் விலையை ரூ.650 ஆக நிர்ணயம் செய்திருந்தது.


பதஞ்சலி ஆயூர்வேதம் நிறுவனர் பாபா ராம்தேவ் (Baba Ramdev's Patanjali Ayurveda) நடத்தும் சமையல் எண்ணெய் நிறுவனமான ருச்சி சோயா இந்த ஃபால்ப் ஆன்  பப்ளிக் ஆஃப்ரிங்கிங் மூலம் கிடைக்கும் தொகையினை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம என்று முடிவெடுத்துள்ளது.


வர்த்தகத்தின் தொடக்கத்தில், ருச்சி சோயா நிறுவனத்தின் பங்குகள்  19% குறைந்து ரூ.706 ஆக இருந்தது. இந்நிறுவனத்தின் பங்குகள், சென்செக்ஸ் 456.41 புள்ளிகள் அல்லது  0.76% குறைந்து  59,720.09 புள்ளிகளில் வர்த்தகமானது.


ருச்சி சோயா எஃப்.பி.ஓ.-வை அறிவித்தபோது, அதன் 21 லாட் பங்குகள் அளவிற்கு, மார்ச்-24-28 தேதி வரை ஒரு பங்கின் விலை ரூ.615 முதல் ரூ.625 வரை என்ற வீதத்தில் சப்ஸ்கிரைப் செய்ய கால அவசாகம் அளித்திருந்தது.


ருச்சி சோயா நிறுவனம் ஈக்விட்டி பங்குங்களை ஒதுக்கீடு செய்ததும், அதன் மூலதன மதிப்பு ரூ.59.16 கோடியிலிருந்து ரூ.72.4 கோடியாக அதிகரித்தது.


இந்நிறுவனம் ஏற்கனவே ஒரு பங்குக்கு ரூ.650 வீதம் சுமார் 1.98 கோடி பங்குகளை வழங்கியதன் மூலம் ஆங்கர் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.1,290 கோடி தொகையினை திரட்டியுள்ளது.


பிடிஐ அறிக்கைகளின்படி, முதலீட்டாளர்கள் தங்கள் ஏலத்தைத் திரும்பப் பெறுவதற்கான விருப்பத்தை வழங்குமாறு சந்தை கண்காணிப்பு நிறுவனமான செபி ருச்சி சோயாவுக்கு அறிவுறுத்தியதை அடுத்து, FPO முதலீட்டாளர்களால் கிட்டத்தட்ட 97 லட்சம் ஏலங்கள் திரும்பப் பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண