ஒருபக்க பண வீக்கம் அதிகரித்து வரும் நிலையில் சேமிப்புகள் திவாலாகி வரும் சூழலில், வீட்டுக் கடன்களின் வட்டி விகிதத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு நாடு முழுவதும் பலரையும் பாதித்து வருகிறது.
கடந்த மாதம் சுமார் 1 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் வீட்டுக் கடனாக பெற்றிருப்பவர்களின் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மாதம் தோறும் சுமார் 12 ஆயிரம் ரூபாய் வரை மாதத் தவணை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
ரெபோ விகிதம் அதிகரித்துள்ளதையடுத்து, உதாரணமாக மும்பையில் சுமார் 2 கோடி ரூபாய் வீட்டுக் கடன் பெறுவோரின் மாதத் தவணை மாதத்திற்கு 1,59,898 ரூபாய் என்ற அளவில் இருந்து கடந்த மே மாதத்தில் 1,64,807 ரூபாய் என்ற அளவிலும், தற்போதைய ஜூன் மாதத்தில் 1,71,041 ரூபாய் என்ற அளவிலும் உயர்ந்துள்ளன.
இதுகுறித்து கடந்த ஆண்டு 1.5 கோடி ரூபாய் வீட்டுக் கடன் பெற்ற ரவி கிருஷ்ணன் என்பவர், `நான் கடன் பெற்றிருந்த வங்கியில் இருந்து என்னை அழைத்து, அரசு நிர்ணயிக்கும் விகிதங்களுக்கு ஏற்ப மாதத் தவணைக் கட்டணம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் எனக் கூறினர்.. இது எங்களின் மாத பட்ஜெட்டில் பெரிய அழுத்தத்தை அளிக்கிறது’ எனக் கூறியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு அடிப்படைப் புள்ளிகளாக வீட்டுக் கடன் வட்டி விகிதம் 150க்குள் கீழ் இருந்தது எனவும், அதனை மாற்றுவது மாதத் தவணையில் சுமார் 11.73 சதவிகிதம் என்ற அளவில் உயர்வை ஏற்படுத்தி வீடுகளை வாங்குபவர்களுக்குக் கூடுதல் சுமை ஏற்படுத்தும் எனவும், வீட்டுக் கடன் பெறுவோரின் எண்ணிக்கை சுமார் 3.38 சதவிகிதம் குறையும் எனவும் நைட் ஃப்ரேங்க் என்ற சர்வதேச ரியல் எஸ்டேட் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை இரண்டு முறைகளில் சுமார் 90 அடிப்படைப் புள்ளிகள் என்றளவில் உயர்த்தியுள்ளது. நுகர்வோரின் பணவீக்கக் குறீயிட்டைச் சமன்படுத்தும் விதமாக மத்திய ரிசர்வ் வங்கி சார்பில் இந்த வட்டி விகிதம் அதிகரிக்கும் எனவும், நாட்டின் பொருளாதாரத்தில் தற்போது ரியல் எஸ்டேட் விகிதம் மைனஸில் இருந்து இயல்புநிலைக்குத் திரும்பும் எனவும் எதிர்பார்ப்பதாக இந்தத் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பேசிய நைட் ஃப்ரேங் நிறுவனத்தின் தலைவர் ஷிஷிர் பைஜல், `அதிகரிக்கும் பணவீக்கத்திற்கு எதிரான போரில், இது மிக முக்கிய கருவி என்பது உண்மைதான்.. எனினும், வட்டி விகிதத்தில் மேற்கொள்ளப்படும் அதிகரிப்புகள் தொடர்ந்து ரியல் எஸ்டேட் துறையில் பாதிப்புகளை ஏற்படுத்தும்’ எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.