இந்தியாவின் பெரும் பணக்காரனான முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் கௌரவ தலைவர் யாசீர் அல் ருமய்யானை இந்திய சில்லறை எண்ணெய் வணிக கூட்டியக்கத்தின் சுயாதீன இயக்குனராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. யாசீர் அல் ருமய்யானை சுயாதீன இயக்குநராக நியமிப்பதற்கு எதிராக வாக்களிக்க இந்திய சில்லறை எண்ணெய் வணிக கூட்டியக்கத்தின் சில பங்குதாரர்கள் முடிவு செய்தனர்.
குறிப்பாக கலிபோர்னியா மாநில ஆசிரியர்கள் ஓய்வூதிய நிதி மற்றும் புளோரிடாவின் மாநில நிர்வாக சபை யாசீர் அல் ருமய்யான் நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான அராம்கோவுக்கு எண்ணெயில் இருந்து இரசாயனம் எடுக்கும் வணிகத்தில் 20% பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் திட்டம் காரணமாகவே ரிலையன்ஸ் நிறுவனம் அராம்கோ கௌரவ தலைவர் யாசிர் அல் ருமாய்யானை இந்திய சில்லறை எண்ணெய் வணிக கூட்டியக்கத்தின் சுயாதீன தலைவராக நியமிக்க ஆதரவு தெரிவித்து இருப்பதாக கிளாஸ் லெவிஸ் நிறுவனம் குற்றம்சாட்டி இருக்கிறது. அத்துடன் பல்வேறு பரிந்துரைகளையும் கிளாஸ் லெவிஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்த பரிந்துரைகளை கேட்ட பிறகே கலிபோர்னியா மாநில ஆசிரியர்கள் ஓய்வூதிய நிதி மற்றும் புளோரிடாவின் மாநில நிர்வாக சபை யாசீர் அல் ருமய்யான் நியமனத்துக்கு எதிராக வாக்களித்து இருக்கின்றன.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், "சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி நிறுவனமான அராம்கோவின் கௌரவ தலைவர் யாசிர் அல் ருமைய்யானுக்கு நாங்கள் ஆதரவு அளித்ததை தொடர்ந்து இந்திய சில்லறை எண்ணெய் வணிக கூட்டியக்கத்தின் சுயாதீன இயக்குனராக அவர் நியமிக்கப்பட்டதற்கும், சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் உடனான ரிலையன்ஸ் நிறுவனத்தின் மற்றொரு ஒப்பந்தத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. எண்ணெய் வணிகத்தில் நீண்டநெடிய அனுபவம் உடையவர் என்ற ஒரே காரணத்துக்காக யாசிர் அல் ருமைய்யான் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்” என அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
எங்கள் பங்குதாரர்கள் அங்கீகரித்ததன் அடிப்படையிலேயே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எண்ணெயிலிருந்து ரசாயணம் தயாரிக்கும் வணிகத்தின் 20% பங்குகளை அராம்கோவிடம் விற்பதாகவும், அது துணை நிறுவனமாக மாற்றப்பட இருப்பதாகவும் ரிலையன்ஸ் தெரிவித்து உள்ளது. அதே போல், O2C எனப்படும் எண்ணெயிலிருந்து ரசாயணம் தயாரிக்கும் துணை நிறுவனத்தின் பங்குகளிலும் சவூதி அராம்கோ நிறுவனம் பங்கேற்கும் என ரிலையன்ஸ் குறிப்பிட்டு உள்ளது.
கடந்த ஜூலை 19 ஆம் தேதி முதல் மூன்று வருட காலத்திற்கு சுயாதீன இயக்குனராக யாசிர் அல் ருமய்யானை ரிலையன்ஸ் நிறுவனம் நியமித்தது. நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில் ருமய்யானின் நியமனம் குறித்த அறிவிப்பை ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்டார். மேலும் நிறுவன பங்குகளில் 50% க்கும் அதிகமானதை ரிலையன்ஸ் வைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். யாசிர் அல் ருமய்யான் நியமனத்தை உறுதிப்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு அக்டோபர் 19 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.