2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியானது, பணமதிப்பிழப்பு கொள்கையின் ஒரு பகுதியாக அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து, 2000 ரூபாய் மதிப்பிலான நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது.
திரும்ப பெறப்பட்ட ரூ.2000:
2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய மற்றும்/அல்லது மாற்றுவதற்கான வசதி அக்டோபர் 07, 2023 வரை நாட்டில் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன. இதையடுத்து, அக்டோபர் 9, 2023 முதல், ரிசர்வ் வங்கியின் கிளை அலுவலகங்களில் தனிநபர்கள் / நிறுவனங்களிடமிருந்து ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை அவர்களது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
மேலும், இந்திய நாட்டிற்குள் இருக்கும் மக்கள் இந்திய தபால் மூலம் ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்காக நாட்டிலுள்ள எந்த ஒரு தபால் நிலையத்திலிருந்தும் ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகங்களுக்கு அனுப்புலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மே 19, 2023 நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் 97.69 சதவிகித நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
ரூ. 2000 அறிமுகம்:
2016 ஆண்டில் புழக்கத்தில் இருந்த அனைத்து ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிறகு, பொருளாதாரத்தின் நாணயத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்ய நவம்பர் 2016 இல் ரிசர்வ் வங்கி ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, மற்ற வகை ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்தவுடன் ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் நிறைவேறியதாகவும். அதனால், 2018-19ல் ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி அன்று ரூ. 3.56 லட்சம் கோடியாக இருந்த 2000 ரூபாயின் மதிப்பானது மார்ச் 29, 2024 அன்று புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.8,208 கோடியாகக் குறைந்ததாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டது.