RBI Repo Rate : கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.


நிதி பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில், மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு குறிப்பிட்ட வட்டி வகிதத்தில் கடன் அளிக்கும். அதன் பெயர்தான் ரெப்போ வட்டி ஆகும். பணவீக்கத்தின்போது, கடன் வாங்குவதை தவிர்க்கும் வகையில் ரெப்போ வட்டியை மத்திய வங்கி உயர்த்தும். ரிசர்வ் வங்கி ஒரு வருடத்தில் ஆறு இருமாத கொள்கை கூட்டத்தை நடத்தும். இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்த முடிவுகள் அறிவிக்கப்படும். 


வட்டி விகிதத்தில் மாற்றமில்லை


கடந்த 9 மாதங்களில் ரெப்போ வட்டி விகிதம் தொடர்ச்சியாக 6 முறை உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் ரெப்போ வட்டி விகிதத்தை 250 புள்ளிகள் உயர்த்தப்பட்டது.  ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 25 புள்ளிகள் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்ட்ட நிலையில், தற்போது அதில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் உயராத காரணத்தால் வீட்டுக் கடன், வாகன கடன், நகை கடன் போன்றவற்றுக்கு ஈஎம்ஐ தொகை உயராது.


அந்த வகையில், வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ரெப்போ வட்டியை 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது.






அந்தவகையில் இந்த மாதத்தில் நடந்த நாணயக் கொள்கை குழுக் கூட்டத்தில் வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது. நாணய கொள்கை குழு முடிவை விளக்கி பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், "டாலர் சரிவு இந்திய பங்குச்சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தவில்லை. பொருளாதார வளர்ச்சி, பணவீக்க கட்டுப்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை” என்றார்.


மேலும், 2023ஆம் ஆண்டில் ரியல் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும். மேலும், பணவீக்கத்தை குறைக்க தொடர்ந்த நாணய கொள்கை கூட்டம் வாயிலாக போராட்டப்படும்” என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில், ஆர்பிஐ அறிப்புக்கு முன் மந்தமாக இருந்த இந்திய பங்குச்சந்தை அதன்பிறகு, சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Share Market : சரிவில் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை...100 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்...!