11 வது முறையாக வங்கிகளின் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும், ரெப்கோ விகிதம் 4 சதவீதமாக நீடிக்கும் எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். 

Continues below advertisement

தற்போது, ரெப்கோ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கான கடன் விகிதத்தில் மாற்றமிருக்காது என்றும் தெரியவந்துள்ளது. 

தொடர்ந்து 11 வது முறையாக முக்கிய வட்டி விகிதங்களை மாற்றவில்லை. MPC பாலிசி ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாக மாற்றாமில்லாமலும், இணக்கமான நிலைப்பாட்டை நீட்டித்து வருகிறது. ஓமிக்ரான் மாறுபாடு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலைமைகளுக்கு மத்தியில் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நிதிக் கொள்கைக் குழு (MPC) பணவியல் கொள்கையை இன்று அறிவித்தது.

Continues below advertisement

இதில், MSF விகிதம் மற்றும் வங்கி விகிதம் மாறாமல் 4.25 சதவீதமாக தொடரும் என்றும், ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் மாறாமல் 3.35 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நடப்பு 2022-23 நிதியாண்டிற்கான முதல் இருமாத பாலிசி இதுவாகும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண