இந்தியாவில் மிகப்பெரிய ஆடை விற்பனை நிறுவனங்களில் ஒன்று ரேமெண்ட். இந்த நிறுவனம் கலர்பிளஸ் மற்றும் பார்க் அவின்யூ ஆகிய இரண்டு பிராண்ட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டு பிராண்ட்களையும் அந்நிறுவனம் விற்பனை செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 


அதன்படி கலர்பிளஸ் பிராண்டை விற்க டென்மார்க் நிறுவனமான பெஸ்ட்செல்லர் இடம் ரேமெண்ட்ஸ் பேச்சுவார்த்ட்தை நடத்தியதாக கூறப்படுகிறது. எனினும் அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. 90 ஸ்டோர்களை கொண்ட கலர்பிளஸ் 500 கோடி ரூபாய் மதிப்பு உடையதாக உள்ளது. அந்த நிறுவனத்தை விற்க ரேமெண்ட்ஸ் நிறுவனம் கூடுதல் தொகை கேட்டதாக தெரிகிறது. ஆகவே பெஸ்ட்செல்லர் இந்த ஒப்பந்தத்தை நிரகாரத்தித்தாக கூறப்படுகிறது. 


 


அதேபோல் பார்க் அவின்யூ பிராண்ட் இந்தியாவில் 70 ஸ்டோர்களை கொண்டுள்ளது. இந்த பிராண்டிற்கு இருக்கும் மதிப்பைவிட சில மடங்கு அதிகமாக ரேமெண்ட்ஸ் கேட்டதாக தெரிகிறது. ஆகவே இதையும் வாங்க தற்போது வரை யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. 




கடந்த 2020ஆம் ஆண்டு ரேமெண்ட்ஸ் நிறுவனம் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையில் இருந்து எடுத்தது. கொரோனா தொற்று காரணமாக பெரிதும் பாதிப்பு அடைந்ததால் இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்திருந்தது. மேலும் பார்க் அவின்யூ மற்றும் கலர்பிளஸ் ஆகிய பிராண்ட்களுக்கு வெளிநாட்டு பிராண்ட்கள் போட்டியாக அமைந்துள்ளது. அதன்காரணமாக இதன் விற்பனை மிகவும் குறைந்துள்ளது. 


ரேமெண்ட்ஸ் நிறுவனம் 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் 46 நாடுகளில் 2800 ஸ்டோர்களையும், 12 ஆயிரம் மல்டி பிராண்ட் ஸ்டோர்ஸ் ஆகியவை உள்ளன. இந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் முன்னணி பிராண்ட்களில் ஒன்று. பெஸ்ட்செல்லர் நிறுவனம் இந்தியாவில் 5 பிராண்ட்களை ஜேக் & ஜோன்ஸ், வெரோ மோடா உள்ளிட்ட பிராண்ட்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அந்த நிறுவனம் இந்தியாவில் 375 பிராண்ட் கடைகள் மற்றும் 1200 ஷோரூம்களில் இடம்பெற்றுள்ளன. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண