ITR Filling: வருமான வரி  தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்னும் 5 நாட்களோடு முடிவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வருமான வரி தாக்கல்:


மாத ஊதியம் பெறுவோர், தொழில் முனைவோர், வருடத்துக்கு ஒருமுறை வருமான வரி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பது வழக்கமான விதி. மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த சென்ற நிதி ஆண்டுக்கான வரி விவரங்களை ஜூலை 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரிக்கணக்கிற்கு, கூடுதல் வரி எதுவும் கிடையாது. 5 லட்சம் ரூபாய்க்கு அதிகமான வருமானம் இருந்தால் கூடுதல் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், வருமான வரி தாக்கல் செய்து விட்டால், அவர்களுக்கு சலுகைகளும் உண்டு. 


2023 ஆம் நிதி ஆண்டுக்கான வருமானம் வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கியுள்ளது. அதாவது ஜூலை 31-ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். கடைசி தேதியை தவறவிட்டால், மறுநாள் ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு பிறகு சமர்ப்பிக்கப்படும் வருமான வரிக்கணக்குகளுக்கு தாமத கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


புதிய வசதி: 


இந்நிலையில், ஆன்லைன் பேமெண்ட் தளமான போன்பே செயலி புதிதாக 'Income Tax Payment' என்ற வருமான வரி செலுத்தும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப் மூலம் வருமான வரி செலுத்துவது மிகவும் எளிதாக இருக்கும். இதற்காக paymate பி2பி நிறுவனத்துடன் போன்பே ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே வருமான வரி செலுத்த முடியும். பொதுவாக, வருமான வரி செலுத்துவதற்கு Income Tax என்ற இணையதளத்தில் லாக்-இன் செய்ய வேண்டும். ஆனால், தற்போது போன்பே மூலம் வரி செலுத்தும் அறிமுகமானதால், வருமான வரியை இணையதளத்தில் செல்ல வேண்டிய அவசியமில்லை.


போன்பே மூலம் வருமான வரி செலுத்துவது எப்படி? 






  • போன்பே ஆப்பை முதலில் அப்டேட் செய்து, ஆப்பின் முகப்பு பக்கத்தில் இருக்கும் Income Tax என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

  • அதனை கிளிக் செய்தால், உங்களது பான் கார்டு விவரங்கள், வருமான வரி விவரங்கள்  கேட்கப்படும்.

  • அதில்,  வருமான வரி செலுத்த வேண்டிய வருடம், எவ்வளவு வரி கட்ட வேண்டும் உள்ளிட்டவை இருக்கும்.

  • இந்த விவரங்களை உள்ளீட்டு, பணத்தை கட்ட வேண்டும். அதன்பின், இமெயில் மூலம் சலான் அனுப்பப்படும்.

  • இதனை அடுத்து, இரண்டு நாட்களுக்குள் அந்த தொகை உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும். 


இப்படி மிகவும் எளிமையாக சில நிமடங்களில் போன்பே ஆப் மூலம் வருமான வரி செலுத்தி விடலாம். இதற்கிடையில், போன்பே மூலம் ஐடிஆர் தாக்கல் செய்யலாம் என்ற தவறான தகவல் வந்தது. ஆனால் அது தவறு. போன்பே ஆப் மூலம் வருமான வரி மட்டுமே செலுத்த முடியும். வருமான வரி படிவத்தை தாக்கல் செய்ய முடியாது. வருமான வரி இணையதளத்திற்கு சென்றே வருமான வரியை தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.