சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை ஏறி இறங்கும், அல்லது மாற்றமின்றி தொடரும். அதன்படி நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல், டீசல்  விலை தொடர்கிறது. மாற்றம் ஏதுமில்லை. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98.40க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை  ரூ.92.58க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றும் விலை மாற்றமின்றி அதே விலை பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. 



 


முன்னதாக, தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசு அதிகரித்து ரூ.92.55க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 15 காசு அதிகரித்து ரூ.85.90க்கு விற்பனையானது. அதனைத்தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைவை விட அதிகம் உயர்ந்தே காணப்பட்டு வருகிறது.சென்னையில் கடந்த மே 16ம் தேதி  ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.94.31க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.88.7க்கு விற்பனை செய்யப்பட்டது. 


பான்-ஆதார் இணைப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது தெரியுமா? விவரமா தெரிஞ்சுக்கோங்க!



மே 25ம் தேதி பெட்ரோல் விலை 95 ரூபாய் தாண்டி வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 20 காசு அதிகரித்து ரூ.95.06க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு லிட்டர் டீசலின் விலை 24 காசு அதிகரித்து ரூ.89.11க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பெட்ரோல் விலை 96 ரூபாயை தாண்டியது. இதனைத்தொடர்ந்து, பெட்ரோல் விலை 97 ரூபாய் தாண்டிய நிலையில், கடந்த வாரம் கொடைக்கானலில் 100 ரூபாயை கடந்து மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. 



பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பெட்ரோலின் விலை ரூ.100-ஐ நெருங்கிவிட்டதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் பெரிய அடியாக இருப்பதாக அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


இதற்கிடையே பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வாய்ப்பில்லை என தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும், கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும் ஒன்றிய அரசு அதிக வரி விதித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.