சென்னையில் பெட்ரோல் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக விற்கப்படுகிறது. தொடர்ந்து 113-வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நேற்றே பீப்பாய்க்கு 100 டாலரை கடந்து விற்பனையானது. இதனால், வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்புள்ளது.
கச்சா எண்ணெய்:
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் மேற்கு ஆசியா நாடுகளில் (ஏமன்- சவுதி அரேபியா) தற்போது பதற்றமான சூழல் அதிகரித்து வருவதால், கச்சா எண்ணெயின் விலை பல ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வை சந்தித்து வருகிறது. கடந்த 17ம் தேதி நிலவரப்படி, சர்வதேச சந்தையில் இந்தியாவிற்கான கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 85.6 அமெரிக்க டாலராகும். இது, கடந்த 2014 ஆண்டிற்கு பிறகு, பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச உயர்வாகும். மேலும், மூன்றாவது காலாண்டில் ஒரு பீப்பாய்க்கு 120 அமெரிக்க டாலராக அதிகரிக்கக் கூடும் என்றும் ப்ளூம்பெர்க் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.
உதாரணமாக, கடந்த 2019-20ம் ஆண்டில் 32.2 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, மொத்த அளவில் வெறும் 27% ஆகும். இந்த நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி 111 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2021 ஜனவரியில் கச்சா எண்ணெய் இறக்குமதி ரூ.68,743.95 கோடி. 2020 ஜனவரியில் கச்சா எண்ணெய் இறக்குமதி ரூ. 92,773.42 கோடி ஆக இருந்தது.