Petrol Diesel Price Today, March 23: வார இறுதி நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாட தயாராக இருக்கும் வாகன ஓட்டிகளே சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்னவென்று காணலாம். 


உலகமே எரிபொருளை மையமாக கொண்டு தான் இயங்குகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கான பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து வருகிறது. நம் நாட்டை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்குகிறது. இதனால் இவற்றின் விலை என்பது அன்றாட நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்விலும் எதிரொலிக்கும். இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருட்களின் விலையை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருவார்கள். 


சென்னையில் இன்றைய நிலவரம்


சென்னையை பொறுத்தவரை இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.75ம், டீசல் ரூ.92.34ஆகவும் விற்பனையாகி வருகிறது. இந்த விலையானது கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. அதற்கு முன்னதாக பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. தேர்தல் நெருங்கும் நிலையில், மக்களை கவர ரூ.2 விலை குறைப்பு செய்யப்பட்டது. 


மத்தியில் 2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பிறகு 3வது முறையாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் மக்கள் தங்கள் பொருளாதாரங்களை இழந்து அவதிப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. அப்போது லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.10 என குறைக்கப்பட்டதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியடைந்தனர். ஆனாலும் விலையானது ரூ.100க்கு மேல் இருந்தது.


இதன்பின்னர் 2022 ஆம் ஆண்டு மே மாதம் குறைக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் மீதான விலை குறைக்கப்பட்டதால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் கீழே இறங்கியது. இப்படியான நிலையில் கிட்டதட்ட 20 மாதங்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை மார்ச் 14 ஆம் தேதி தான் மாற்றம் கண்டது.