Petrol Diesel Price Today, March 22: சென்னையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல்,டீசலின் இன்றைய விலை நிலவரத்தை காணலாம்.
எரிபொருள் விலை நிலவரம்
இந்தியாவை பொறுத்தவரை கிட்டதட்ட 80 சதவிகித வாகனங்கள் பெட்ரோல், டீசலில் தான் இயங்குகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க மின்சார வாகனங்கள் பயன்படுத்துமாறு மத்திய, மாநில அரசு ஊக்குவித்தாலும், பெட்ரோல், டீசல் பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை நாளுக்கு நாள் வாகனங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் பெட்ரோல், டீசல் தேவையும் அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டு எரிபொருட்கள் விலையானது நிர்ணயிக்கப்படும் முறை அறிமுகமானது. இதனால் தினசரி பெட்ரோல், டீசல் விலையை மாற்றப்படலாம் என்பது கொண்டு வரப்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலை ஏறத் தொடங்கியது. கிட்டதட்ட ரூ.100க்கு மேல் சென்றதால் வாகன ஓட்டிகள், நடுத்தர மக்கள் என அனைவரும் விழிபிதுங்கினர்.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (மார்ச் 22) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.75ம், டீசல் ரூ.92.34ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கொரோனா பரவலால் மக்கள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்தனர். அப்போது நவம்பர் மாதம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.10 என மத்திய அரசு குறைத்ததால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்தனர். இதனைத் தொடர்ந்து அடுத்த 5 மாதங்களில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. கலால் வரி குறைப்பால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8, டீசல் விலை ரூ.6 குறைந்தது சற்றே ஆறுதலை தந்தது. இருந்தாலும் ரூ.100க்கு மேல் விற்பனை விலை இருந்து வந்தது. கிட்டதட்ட 22 மாதங்கள் மாறாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் 14 ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. இரண்டு எரிபொருட்களின் விலை ரூ.2 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Arvind Kejriwal Arrest: அரவிந்த் கெஜ்ரிவால் கைது: வெறுப்பின் ஆழத்தில் சென்று மக்களாட்சியை சிதைப்பதாக தலைவர்கள் கண்டனம்