மாதச் சம்பளம் வாங்கும் பலருக்கும் கிரெடிட் கார்டுகள் எளிதில் சாத்தியமாகிவிடுகின்றன. கிரெடிக் கார்டுகளை வாங்குவதும் தவறல்ல பயன்படுத்துவதும் தவறல்ல ஆனால் அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் அதன் மீதான கடனை எப்படித் திருப்பிச் செலுத்துகிறோம் என்பதில் தான் சாமர்த்தியமே இருக்கிறது.
கடன் அட்டை என்பதை மறவாதீர்:
டெபிட் கார்டு பயன்பாட்டில் உங்கள் பணத்தை நீங்கள் பயன்படுத்தி பொருட்களை வாங்குகிறீர்கள். ஆனால், கிரெடிட் கார்டில் நீங்கள் வாங்கும் பொருளுக்கு வங்கிக் கடனாகா பணம் கொடுக்கிறது. அதனால், நீங்கள் ஸ்வைப் செய்வது கடன் அட்டை என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடனைத் திருப்பிச் செலுத்துவதுபோல் கடன் அட்டைக்கான கட்டணத்தையும் குறித்த நேரத்தில் நீங்கள் செலுத்திவந்தால் உங்களுக்கு சிக்கல் ஏற்படாது.
அப்படிப் பயன்படுத்தினால், கிரெடிட் கார்டுகள் உடனடி கடன்களை அணுகுவதற்கும், பணத்தை திரும்பப் பெறுதல், தள்ளுபடிகள், ரிவார்டு பாயிண்டுகள், எந்த செலவும் இல்லாத இஎம்ஐ சலுகைகள் போன்றவற்றுக்கு ஒரு சிறந்த நிதி கருவியாகும். ஆனால், நம்மில் பெரும்பாலானோரும் கிரெடிட் கார்டுகளை சாதுர்யமாகப் பயன்படுத்தாமல் கடன் வலையில் சிக்கிக் கொள்கிறோம்.
நீங்கள் செய்யக்கூடாதவை:
உங்களிட கிரெடிட் கார்டு இருந்தால் நீங்கள் கீழே சொல்லப்பட்டுள்ள மூன்று தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்யாமல் இருங்கள்.
இதில் முதல் தவறு முழு கிரெடிட் கார்டு பில்லை திருப்பிச் செலுத்தாதது. ஏனெனில் செலுத்தப்படாத கடன் அட்டை நிலுவைக்கு, வங்கிகள் ஆண்டிற்கு 24% முதல் 49% வரை அதிக நிதி கட்டணங்களை வசூலிக்கின்றன. முழு கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையையும் திருப்பிச் செலுத்தாமல், நீங்கள் அந்த அட்டையில் மேலும் மேலும் பரிவர்த்தனை செய்துகொண்டே இருந்தால், கிரெடிட் கார்டு கடனில் செங்குத்தான அதிகரிப்பு ஏற்படலாம்.
அடுத்த தவறு செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை மட்டுமே திருப்பிச் செலுத்துதல். கிரெடிட் கார்டு குறைந்தபட்ச தொகையை மட்டுமே திருப்பிச் செலுத்துவது. குறைந்தபட்ச தொகையை மட்டுமே திருப்பிச் செலுத்துவது மாதந்தோறும் ரூ .1,300 வரை தாமதமாகச் செலுத்தும் கட்டணம் மற்றும் அவர்களின் கடன் மதிப்பெண்ணில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதிலிருந்து காப்பாற்றும். ஆனாலும், கார்டு பில் தொகைக்கு தொடர்ந்து நிதி கட்டணம் செலுத்த வேண்டும்.
மிகப்பெரிய மூன்றாவது தவறு, ஏடிஎம் பணத்தை எடுக்க கடன் அட்டையைப் பயன்படுத்துதல். அட்டை வழங்குபவர்கள் கிரெடிட் கார்டுகள் மூலம் ஏடிஎம் பணத்தை திரும்பப் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கின்றனர். திரும்பப் பெற்ற தொகையை திருப்பிச் செலுத்தும் வரை அட்டைதாரர்கள் தொடர்ந்து அதற்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டிவரும். எனவே, உங்கள் கிரெடிட் கார்டு மூலம் முடிந்தவரை ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதைத் தவிர்க்கவும். அத்தகைய பணம் எடுப்பது தவிர்க்க முடியாததாக இருந்தால், முழுத் தொகையையும் சீக்கிரம் திருப்பிச் செலுத்திவிடவும்.
மீள்வது எப்படி?
நீங்கள் செய்யக்கூடாது என்று சொன்ன மூன்று தவறுகளையுமே நான் செய்துவிட்டேன். மீள்வதற்கு வழி இருக்கிறதா என கேட்கிறீர்களா? நிச்சயம் இருக்கிறது.
சரியான நேரத்தில் தங்கள் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்கு, இஎம்ஐ மாற்று வசதியைத் தேர்ந்தெடுப்பது கிரெட்டி கார்டு கடன் வலையில் இருந்து தப்பிக்க சிறந்த வழி. இருப்பினும், EMI மாற்றுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் உயர்ந்த நிலையில் இருந்தால் மாற்று வழிகளை ஆராயுங்கள்.
கிரெடிட் கார்டு இருப்பு பரிமாற்றம் என்றொரு வழி இருக்கிறது. அதாவது உங்களது தற்போதைய நிலுவைத் தொகையை மற்றொரு கிரெடிட் கார்டு வழங்குநருக்கு மாற்ற இது உங்களை அனுமதிக்கிறது. இந்த குறிப்பிட்ட காலம் விளம்பர வட்டி காலம் என பிரபலமாக அறியப்படுகிறது. கிரெடிட் கார்டு வழங்குபவர்கள் விளம்பர வட்டி காலம் முடிந்தவுடன் மாற்றப்பட்ட தொகையின் செலுத்தப்படாத பகுதியில் வழக்கமான நிதிக் கட்டணங்களை வசூலிக்கத் தொடங்குகின்றனர். எனவே, குறிப்பிட்ட விளம்பர வட்டி காலத்திற்குள் செலுத்தப்படாத கடன் அட்டை நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்தும் திறன் கொண்ட அட்டை வைத்திருப்பவர்களுக்கு இருப்பு பரிமாற்ற விருப்பம் பலனளிக்கும். சில கிரெடிட் கார்டு வழங்குநர்கள் மாற்றப்பட்ட நிலுவைத்தொகையை EMI ஆக மாற்ற அனுமதிக்கின்றனர்.
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தனிநபர் கடன், டாப்-அப் வீட்டுக் கடன் மற்றும் தங்கக் கடன் ஆகியவற்றைப் பெறலாம். அத்தகைய கடன் விருப்பங்களுக்கு கடன் வழங்குபவர்கள் வசூலிக்கும் வட்டி விகிதம் பொதுவாக கிரெடிட் கார்டு இஎம்ஐ மாற்றங்களுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதங்களை விட குறைவாக இருக்கும். அப்படி வேறு வழியில் கடன் பெற்று கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்யலாம். ஏனெனின் குறைக்கப்பட்ட வட்டி செலவு, கடன் சிக்கலில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.