Property Home Insurance: வீடு அல்லது சொத்து காப்பீடு மூலம் கிடைக்கக் கூட்ய, பலன்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
வீட்டுக் காப்பீட்டு திட்டம்:
வாழ்க்கை என்பது நிச்சயமற்றது. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. திடீர் கஷ்டங்களுக்கு எதிரான காப்பீடு அல்லது முதலீடுகள், சிறந்த ஆபத்துதவிகளாக இருக்கலாம். அதனை பொருட்டே, காப்பீடு என்பது தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. ஆயுள் காப்பீடு, உடல்நலக் காப்பீடு பற்றி பலரும் அறிந்திருக்கக் கூடும். ஆனால், வீட்டுக் காப்பீடு பற்றி மக்களுக்கு மிகக் குறைவாகவே தெரியும். வீட்டுக் காப்பீடு என்பது சொத்துக் காப்பீடு என்றும் அழைக்கப்படுகிறது.
நிதிப் பாதுகாப்பிற்கான காப்பீடு:
ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் மாதமும் மழை, வெள்ளம் தமிழக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. திடீர் வெள்ளத்தால் வீடுகள் இடிந்து விழுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. அண்மையில் கேரளாவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், எண்ணற்ற வீடுகள் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாயின. இதுபோன்ற இயற்கை சீற்றங்களால் பொதுமக்கள் கடும் இன்னல்கள சந்திக்க நேர்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், வீட்டுக் காப்பீடு என்பது வீட்டு உரிமையாளர்களுக்கு நிதிப் பாதுகாப்பு அளிக்கிறது
நிதிச் சுமையை தவிர்க்கலாம்
இந்த காப்பீடு பெற்றவர்கள் வெள்ளத்தால் வீடுகள், தளவாடங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை இழந்தாலும், அந்தப் பொருட்களையெல்லாம் புதிதாக மாற்றுவதற்கு மீண்டும் பணம் செலவழிக்க வேண்டியதில்லை. வீட்டுக் காப்பீட்டுக் கொள்கையைத் தேர்ந்தெடுப்பதில் பல நன்மைகள் உள்ளன. வீட்டுக் காப்பீடு/சொத்து காப்பீடு உங்கள் வீட்டில் உள்ள மரச்சாமான்கள் மற்றும் மின்னணுப் பொருட்களையும் உள்ளடக்கும்.
காப்பீடு திட்டத்தின் பாதுகாப்பு அம்சங்கள்:
தீ, கலவரங்கள், மின்னல் தாக்குதல்கள், கூரை நீர் தொட்டிகள் வெடிப்பு, வெடிப்பு, மின்னல், வெள்ளம், சூறாவளி, சுனாமி போன்ற மனிதனால் ஏற்படும் மற்றும் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் இழப்புகளுக்கு எதிராக காப்பீட்டு திட்டங்கள் பொதுவாக பாதுகாப்பை வழங்குகிறது. காப்பீட்டு நிறுவனம் நகைகள், மின்சாதனங்கள் மற்றும் தளபாடங்கள் சேதமடைவதற்கு இழப்பீடு வழங்குகிறது.
வருடாந்திர புதுப்பித்தல் தேவையில்லை:
கலவரங்கள், பயங்கரவாத தாக்குதல்கள், பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் போன்ற பேரிடர்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் எந்த துணை நிரலையும் தேர்ந்தெடுப்பது உங்கள் சூழலுக்கு ஏற்றது. எனவே உங்கள் பாலிசி கவரேஜை அதிகரிக்கலாம் மற்றும் வீட்டின் பாதுகாப்பை பலப்படுத்தலாம். வீட்டுக் காப்பீட்டில் ஒரு வருட பாலிசிகள் மற்றும் நீண்ட கால பாலிசிகளும் அடங்கும். நீங்கள் ஒரு நீண்ட கால பாலிசியை எடுத்தால் ஒவ்வொரு வருடமும் குறைந்த பிரீமியத்துடன் புதுப்பிக்க வேண்டியதில்லை.
இப்போது வீட்டுக் காப்பீடு எடுப்பது மிகவும் எளிது. எங்கும் செல்லாமல், உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கலாம். இந்த சேவையை பல்வேறு முன்னணி நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.