வருமான வரி செலுத்துபவர்கள் பெரும்பாலானவர்களுக்கு  படிவம் 16 பற்றி தெரிந்திருக்கும். ஆனால் அதைவிட முக்கியமானது படிவம் 26 AS. ஆண்டு தகவல் அறிக்கை அல்லது படிவம் 26 AS என்பது உங்கள் பான் கார்டுடன் தொடர்புடைய வரிவிலக்கு குறித்த முழு விவரத்தையும் அளிக்கிறது. இது ஒவ்வொரு நிதியாண்டிற்கும் பான் கார்டு எண்ணினை அடிப்படையாகக் கொண்டு உங்கள் டி.டி.எஸ் மற்றும் டி.சி.எஸ்.பிடித்தம் மற்றும் அந்தப் பணத்தைத் திரும்பப் பெறுதல் எப்படி என்பது தொடர்பான முழு பதிவையும் தருகிறது.வருமானவரிச் சட்டம் பிரிவு 230ஏஏ விதி 31 ஏபியின் கீழ் ஆண்டு தகவல் அறிக்கையை இது உள்ளடக்கியுள்ளது.இந்த ஆண்டுத் தகவல் அறிக்கை அரசாங்கத்தால் பெறப்பட்ட வரிவிவரத்தை உள்ளடக்கியது.


மாதசம்பளம் முதலீடுகளின் மூலம் கிடைக்கும் வருமானம் என ஒரு நபரின் வருமான ஆதாரங்கள் பற்றிய தகவல்களும் இந்த படிவத்தில் உள்ளடக்கம். மேலும் வங்கி அல்லது பிற நிதி நிறுவனத்தால் கழிக்கப்படும் வரி, விற்பனை/கொள்முதல்,அசையாச் சொத்துக்களில் முதலீடு மற்றும் வாடகை போன்ற விவரங்களும் இந்தப் படிவத்தில் அடங்கும். மற்றும் தனிநபர் சுயமதிப்பீட்டு வரி, முன்கூட்டிய வரி போன்ற முக்கியப் பரிவர்த்தனைகளை இது உள்ளடக்கியது.ஒருவரிடமிருந்து பெறப்படும் வரி அரசாங்கத்தின் கணக்கில் சரியாக டெபாசிட் செய்யப்படுகிறதா என்பதை இந்த படிவம் உறுதிபடுத்துகிறது.


இது எங்கே இருக்கும்?
இந்த படிவம் பெரும்பாலும் வங்கிக்கணக்கு இருக்கும் வங்கிகளில் கிடைக்கும் அல்லது டிடிஎஸ்(TDS-traces) தளத்தில் கிடைக்கப்பெறும். வருமானவரி செலுத்துபவர்கள் வருமானவரித்துறையின் இணையதளத்தில் உள்ள உங்கள் ஈ-ரிடர்ன் பக்கத்தில் கிடைக்கப்பெறும்.


இதனை எப்படி பதிவிறக்கம் செய்வது?


இந்த படிவத்தைப் டவுன்லோட் செய்ய விரும்புபவர்கள் பான் கார்டு வைத்திருப்பது அவசியம். உங்கள் பான் கார்டு எண் இருந்தால் மட்டுமே இதனைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.வருமானவரித்துறையின் பக்கத்தை விட https://contents.tdscpc.gov.in/ பக்கத்தில் இதனை எளிமையாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.இதனை இலவசமாக டவுன்லோட் செய்யலாம். எதுவாக இருப்பினும் உங்கள் பான் கார்ட் எண்ணை பதிவிட்டால் மட்டுமே இதனை டவுன்லோட் செய்ய முடியும். 


இதுதவிர ஆந்திர வங்கி, ஐடிபிஐ வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா,இந்தியன் வங்கி, மைசூர் ஸ்டேட் பாங்க் ,பாங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வெளிநாட்டு வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, பாங்க் ஆப் இந்தியா ,சிந்து வங்கி ,திருவாங்கூர் ஸ்டேட் வங்கி, மகாராஷ்டிரா வங்கி, கர்நாடக வங்கி, சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி ,மஹிந்திரா வங்கி, பெட்டி பெடரல் வங்கி, மத்திய வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், கருர் வைஸ்யா வங்கி ,சிட்டி யூனியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யுகோ வங்கி ,கார்ப்பரேஷன் வங்கி ,விஜயா வங்கி ,தேனா வங்கி ,ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானேர் , எச்.டி.எஃப்.சி வங்கி போன்ற வங்கிகளும் இந்த படிவம் கிடைக்கும்.