பெண் குழந்தைகளின் பெற்றோருக்கான அரசு உதவி பெற்ற சேமிப்புத் திட்டம் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம். பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் முதலான எதிர்காலத் திட்டங்களுக்காக பெற்றோர் பணம் சேமிப்பதை ஊக்குவிக்கும் விதமாக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய வட்டி விகிதம் 7.6 சதவிகிதமாக வழங்கப்படுகிறது. பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயதை அடைவதற்குள், குறைந்தபட்சமாக 250 ரூபாய் முதலீடு செய்து இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த தொடங்கலாம். மேலும், ஒரு நிதியாண்டில் தொடர்ந்து குறைந்தபட்சமாக 250 ரூபாய் என்ற அளவிலும், அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் என்ற அளவிலும் இந்தத் திட்டத்தில் பணம் செலுத்தலாம். 


சுகன்யா சம்ரித்தி யோஜனா வங்கிக் கணக்கை அஞ்சல் நிலையங்கள், தனியார் வங்கிகளின் அதிகாரப்பூர்வ கிளைகள் ஆகியவற்றில் தொடங்கலாம். தொடங்கப்படுவது முதல் அடுத்த 21 ஆண்டுகள் வரை இந்தக் கணக்கைப் பயன்படுத்தலாம். 


சுகன்யா சம்ரித்தி யோஜனா வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இந்தியாவில் எந்தப் பகுதிக்கும் பரிமாற்றம் செய்ய முடியும். மேலும், கணக்குதாரரின் பெற்றோர் தங்களின் இருப்பிட மாற்றத்திற்கான ஆதாரங்களை அளிக்கும் போது, இந்தப் பரிமாற்றம் இலவசமானது.ஆதாரம் அளிக்கப்படாவிடில், இதற்காக 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 



இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தும் பெண் குழந்தைகள் 18 வயதை அடைந்தாலோ, பத்தாம் வகுப்பு முடித்தாலோ இந்தக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும், பணத்தை எடுக்கும் போது, மொத்தமாகவும், தவணை முறையிலோ, ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ளலாம். 


சுகன்யா சம்ரித்தி யோஜனா வங்கிக் கணக்கைக் கீழ்க்கண்ட காரணங்களுக்காக அதனைத் தொடங்கிய 5 ஆண்டுகளில் மூடலாம். 


1. கணக்குதாரரின் மரணம். (இறந்த நாளில் இருந்து சேமிப்பு கணக்கை மூடும் நாள் வரையிலான வட்டி விகிதம் தொடரும்)
2. கணக்குதாரருக்கு உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் நோய்
3. கணக்குதாரரின் பெற்றோர்/காப்பாளர் மரணம்


இந்தக் காரணங்களுக்காக வங்கிக் கணக்கை மூடுவதற்கான விண்ணப்பங்களும், ஆவணங்களும் வங்கிகளும், அஞ்சல் நிலையங்களிலும் கிடைக்கின்றன. 



சுகன்யா சம்ரித்தி யோஜனா வங்கிக் கணக்கைத் தொடங்கிய நாள் முதல் 21 ஆண்டுகள் முடியும் வரை, வட்டி விகிதம் சேர்க்கப்பட்டு மொத்தமாக தொகையாக சேமிப்புக் கணக்கில் சேர்க்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி விகிதத்திற்கு ஏற்ப வட்டி சேர்க்கப்படுகிறது. 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண