SBI Sarvottam FD Scheme: பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ வங்கி, சர்வோத்தம் நிலையான வைப்புத் தொகை திட்டத்தில், 7.9 சதவிகித வட்டியை வழங்குகிறது.


சர்வோத்தம் நிலையான வைப்புத்தொகை திட்டம்:


நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ),  ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களுக்காக சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி,  எஸ்பிஐயின் சர்வோத்தம் திட்டம், மூத்த குடிமக்களின் சேமிப்பிற்கு 7.90 சதவிகித வட்டியை வழங்குகிறது. இது அரசு நடத்தும் பல திட்டங்களுக்கான வட்டியை விட அதிகமாகும். இத்திட்டம் சில விதிகளைக் கொண்டிருந்தாலும்,  மூத்த குடிமக்கள் அதிக வருமானம் ஈட்டுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.


வட்டி விவரம்:


எஸ்பிஐ சர்வோத்தம் திட்டம் PPF, NSC மற்றும் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களை விட அதிக வட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது ஒன்று  அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே செயல்படும். அதாவது, குறுகிய காலத்தில் பெரிய நிதியை உருவாக்கலாம். எஸ்பிஐ சர்வோத்தம் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 2 வருட டெபாசிட்டுகளுக்கு அதாவது நிலையான வைப்புத் தொகைக்கு 7.4 சதவீத வட்டியைப் பெறுகிறார்கள். இந்த வட்டி விகிதம் பொது மக்களுக்கானது. அதே நேரத்தில், மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் 7.90 சதவீத வட்டியைப் பெறுகிறார்கள். அதே நேரம் ஒரு வருட முதலீட்டிற்கு பொது மக்கள் 7.10 சதவிகித வட்டியும், மூத்த குடிமக்கள் 7.60 சதவீத வட்டியும் பெறுகின்றனர்.


மூத்த குடிமக்களுக்கு வட்டிப் பலன்:


மூத்த குடிமக்களுக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலான, ஓராண்டுக்கான முதலீட்டிற்கு  7.82 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. அதேசமயம், இரண்டு வருட டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 8.14 சதவிகிதமாக உள்ளது. ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான மொத்த டெபாசிட்டுகளுக்கு, எஸ்பிஐ மூத்த குடிமக்களுக்கு ஓராண்டிற்கு 7.77 சதவிகிதமும்,  2 ஆண்டுகளுக்கு 7.61 சதவிகிதமும் வட்டி வழங்குகிறது. இத்திட்டத்தில் கூட்டு வட்டி கிடைக்கும்.


குறைந்தபட்சம் ரூ. 15 லட்சத்தை முதலீடு செய்யலாம்:


எஸ்பிஐ சர்வோத்தம் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.15 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை முதலீடு செய்யலாம். ஓய்வு பெற்றவர்களுக்கும், பிஎஃப் நிதியில் பணம் வைத்திருப்பவர்களுக்கும் இந்தத் திட்டம் சிறந்தது. இதில் ரூ.2 கோடிக்கு மேல் முதலீடு செய்ய வாய்ப்பும் உள்ளது. ஆனால் வட்டி 0.05 சதவிகிதம் குறைவு. 


சர்வோத்தம் திட்டத்தின் சிக்கல்:


எஸ்பிஐ சர்வோத்தம் திட்டத்தில் நீங்கள் முதிர்ச்சி காலத்திற்கு முன்பே பணத்தை எடுக்க முடியாது. இவை அழைக்க முடியாத திட்டங்களாகும், அதாவது திட்டம் காலம் முடியும் வரை முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற முடியாது. முதிர்ச்சி காலத்திற்கு முன் பணத்தை எடுத்தால், அதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.