நிதி பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில், மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு குறிப்பிட்ட வட்டி வகிதத்தில் கடன் அளிக்கும். அதன் பெயர்தான் ரெப்போ வட்டி ஆகும். பணவீக்கத்தின்போது, கடன் வாங்குவதை தவிர்க்கும் வகையில் ரெப்போ வட்டியை மத்திய வங்கி உயர்த்தும்.


அந்த வகையில், வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்பார்த்தபடியே, ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.


ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் வீடு, வாகன கடன்களின் வட்டி விகிதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெப்போ வட்டியை தொடர்ச்சியாக 6ஆவது முறையாக உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி. இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறுகையில், "எங்கள் கொள்கை நிலைப்பாடு கடன் வாங்கும் வசதியை திரும்பப் பெறுவதில் கவனம் செலுத்துவது ஆகும்"


பொதுவாக, ரெப்போ வட்டி உயர்த்தும் முடிவை நாணய கொள்கை குழு உறுப்பினர்கள்தான் எடுப்பார்கள். அந்த குழுவில் ரிசர்வ் வங்கியை சேர்ந்த மூவரும் மூன்று வெளிநபர்களும் இடம்பெற்றிருப்பார்கள். அந்த வகையில், ஆறு உறுப்பினர்களில் நான்கு பேரின் ஆதரவில் ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.


நாணய கொள்கை குழு முடிவை விளக்கி பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், "உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் சில மாதங்களுக்கு முன்பு இருந்ததைப் போல் இப்போது மோசமாகத் தெரியவில்லை. முக்கிய நாடுகளில் வளர்ச்சி வாய்ப்புகள் மேம்பட்டுள்ளன.


அதே சமயம் பணவீக்கம் குறைந்து இருந்தாலும் முக்கிய பொருளாதார நாடுகளின் இலக்கை விட அதிகமாகவே உள்ளது. நிலைமை நிச்சயமற்றதாக உள்ளது. முக்கிய பணவீக்கம் அதிகமாக உள்ளது. மேலும் அளவீடு செய்யப்பட்ட கொள்கை நடவடிக்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.


முக்கிய அல்லது அடிப்படை பணவீக்கத்தின் தன்மை கவலைக்குரிய விஷயம். பணவீக்கத்தில் ஒரு தீர்க்கமான மிதமான நிலையை நாம் காண வேண்டும்" என்றார்.


நவம்பர் மாதம் 5.88 சதவிகிதமாக இருந்த ஆண்டு சில்லரை பணவீக்க விகிதம் டிசம்பர் மாதம்  5.72 சதவிகிதமாக குறைந்தது. இது, ரிசர்வ் வங்கி வதித்த அதிகபட்ச விகித அளவை விட குறைவு. ரிசர்வ் வங்கி வதித்த அளவின்படி, சில்லரை பணவீக்கம் 2 சதவிகித்தில் இருந்து 6 சதவகிதத்திற்குள் இருக்க வேண்டும்.


 






ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் வீடு, வாகன கடன்களின் வட்டி விகிதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.