போஸ்ட் ஆஃபீஸ் பென்ஷன் திட்டத்தின்(Post Office Pension Scheme) முதலீடு செய்து ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.3000 முதல் அதிகபட்சமாக ரூ.29,700 வரை பெறமுடியும்.


போஸ்ட் ஆஃபீஸ் சேமிப்புத் திட்டங்களுக்கு சாமான்ய மக்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. காரணம் பாதுகாப்பு, அதிக ரிட்டர்ன். எளிய மனிதர்கள் தங்கள் சேமிப்பின் மீதான பாதுகாப்பு விஷயத்தைப் பொருத்தவரை போஸ்ட் ஆஃபீஸ் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால்தான் அவ்வப்போது போஸ்ட் ஆஃபீஸும் பல்வேறு சேமிப்பு மற்றும் பென்ஷன் திட்டங்களை மக்களுக்கு அறிவித்துவருகிறது. அந்த வகையில், ஒரு மாதாந்திர வருவாய் திட்டத்தில் பென்ஷன் பலனையும் இணைத்துக் கொடுத்துள்ளது. இதில் முதலீடு செய்பவர்களுக்கு மெச்சூரிட்டி எனப்படும் பண முதிர்ச்சி பலன்களும் கிடைக்கும்.
தபால் நிலையத்தின் எம்ஐஎஸ் திட்டமென்றால் என்ன?


தபால் நிலையத்தின் எம்ஐஎஸ் Monthly Income Scheme Account (MIS) திட்டமென்பதில் முதலீட்டாளர் சில நூறு, ஆயிரம் ரூபாயில் தொடங்கி அதிகபட்சமாக ரூ.4.5 லட்சம் வரை முதலீடு செய்ய வழிவகுக்கும் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் மிகக்குறைந்த முதலீடு என்பது ரூ.1000. இதில் கூடுதல் பலன் பெற இன்னொருவரையும் இணைத்துக் கொண்டு ஜாயின்ட் அக்கவுன்ட்டாக தொடங்கலாம். ஜாயின்ட் அக்கவுன்ட்டில் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். ஒரு முதலீட்டாளரால் 3 பேர் வரை கூட்டுக் கணக்கைத் திறக்க முடியும். ஆனால், யார் எவ்வளவு பங்களிப்பு செய்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், கணக்கு அனைவருக்கும் சமமாக சொந்தமானது.


இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் பணத்துக்கு 6.6% வட்டி வழங்கப்படுகிறது. போஸ்ட் ஆஃபீஸ் திட்டங்களில் கூட்டு வட்டிக்குப் பதிலாக சாதாரண தனி வட்டியே வழங்கப்படுகிறது.


ரூ.50,000 முதலீட்டில் ரூ.3300 பென்ஷன் பெறுவது எப்படி?


எம்ஐஎஸ் கால்குலேட்டரின் படி ரூ.ரூ.50,000 முதலீடு செய்தால், ஆண்டுதோறும் ரூ.3300 பென்ஷனாகப் பெற முடியும். ஐந்து ஆண்டுகளிலேயே மொத்த வட்டியான ரூ.16500 முதலீட்டாளர்கள் எடுத்துவிடலாம். அதுவே முதலீட்டாளர் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் ரூ.550 வீதம் ஆண்டுக்கு ரூ.6600 பெற முடியும். வட்டியாக ஐந்து ஆண்டுகளில் ரூ.33000 ஈட்டிவிடலாம். 


அதே ரூ.4.5 லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் ரூ.2475 வீதம் ஆண்டுக்கு ரூ.29,700 பெறலாம்.


தபால் அலுவலக மாத வருமான திட்டம் என்பது குறைந்த ஆபத்துள்ள முதலீட்டுத் திட்டமாகும், இது நிலையான வருமானத்தை வழங்குகிறது மற்றும் இது பழமைவாத முதலீட்டாளர்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் மிகவும் பொருத்தமானது. மேலும், POMIS இன் முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருமானம் வங்கி FD கள் உள்ளிட்ட பிற நிலையான வருமான முதலீடுகளுடன் ஒப்பிடும்போது அதிக வட்டியை வழங்குகின்றன.