Post Office Monthly Income Scheme: எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளைப் போலவே தபால் நிலையங்களிலும் சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. இவை ஆண்டாண்டு காலமாகவே மக்களின் நம்பகத்தன்மை பெற்று பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. போஸ்ட் ஆஃபீஸ் மன்த்லி இன்கம் ஸ்கீம் (POMIS) ஏன் அவசியம். அதன் பலன் என்ன? எப்படி இத்திட்டத்தில் இணையலாம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.


போஸ்ட் ஆஃபீஸ் மன்த்லி இன்கம் ஸ்கீம் (POMIS)  என்றால் என்ன?


போஸ்ட் ஆஃபீஸ் மன்த்லி இன்கம் ஸ்கீம் (POMIS) என்பது நிதியமைச்சகத்தின் நேரடிப் பார்வையின் கீழ் மக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மிகுந்த நம்பகத்தன்மை வாய்ந்த சேமிப்புத் திட்டம். 
இதில் ஒருவர் ரூ.4.5 லட்சம் வரை தனியாகவும், ரூ.9 லட்சம் வரை கூட்டாகவும் அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்கலாம். 2021 செப்டம்பர் 30 தேதியின் படி இத்திட்டத்தின் கீழான சேமிப்புகளுக்கு ஆண்டுக்கு 6.6% வட்டி மாதந்தோறும் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.
உதாரணத்துக்கு நீங்கள் ரூ.4.5 லட்சம் தொகையை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு மாதந்தோறும் ரூ.2,475 வட்டியாகக் கிடைக்கும்.


இந்தத் திட்டத்தின் நன்மைகள் என்னென்ன?
* முதலீட்டுக்கு பாதுகாப்பு.. நீங்கள் முதலீடு செய்யும் பணம் அரசாங்கம் மேற்பார்வையில் பாதுகாப்பாக இருக்கும்.
* காலக்கெடு.. போஸ்ட் ஆஃபீல் மாதாந்திர சம்பாத்திய திட்டத்தின் காலக்கெடு 5 ஆண்டுகள். அது முடிந்தவுடன் நீங்கள் வட்டியுடன் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் இல்லாவிட்டால் மீண்டும் முதலீடு செய்யலாம்.
* ரிஸ்க் இல்லை: இந்த முதலீட்டில் எந்த சந்தை அபாயமும் இல்லை. அதனால் நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம்.
* ரிட்டர்ன் உறுதி.. மாதந்தோறும் வட்டி கிடைப்பதுடன் ரிட்டர்னும் உறுதி.
* வரிப் பிரச்சினை இல்லை: உங்களின் முதலீடு Section 80Cல் வராது என்பதால் டிடிஎஸ் பிரச்சினை இல்லை.
* நிறைய கணக்குகள்.. நீங்கள் உங்கள் பெயரிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளைத் தொடங்கிக் கொள்ளலாம். ஆனால் உங்கள் பெயரிலான மொத்த முதலீடு ரூ.4.5 லட்சத்தைத் தாண்ட முடியாது. அதுவே ஜாயின்ட் கணக்கு என்றால் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்து கொள்ளலாம்.
* ஃபண்ட் மூவ்மன்ட் வசதி: தேவைப்படும்போது நீங்கள் அந்தப் பணத்தை ஆர்டி கணக்கிற்கும் மாற்றிக் கொள்ளலாம்.




கணக்கை துவக்க தகுதி என்ன?
* இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
* 18 வயதை தாண்டியவராக இருக்க வேண்டும்.
* உங்கள் மைனர் வாரிசின் பெயரிலும் ஆரம்பிக்கலாம். ஆமால் அவர்கள் அந்தப் பணத்தை 18 வயது பூர்த்தியான பின்னரே பெற முடியும்.


கணக்கை எப்படி தொடங்குவது?
* முதலில் போஸ்ட் ஆஃபீஸ் சேவிங்ஸ் அக்கவுன்ட் ஆரம்பிக்க வேண்டும்.
* பின்னர், போஸ்ட் ஆஃபீஸ் மன்த்லி இன்கம் ஸ்கீம் (POMIS) அப்ளிகேஷன் வாங்க வேண்டும்.
* அதில் உங்க்ள் புகைப்படம், அடையாள அட்டை நகல் 2, ஆகியனவற்றை இணைக்க வேண்டும்.
* யாரை நாமினியாக நியமிக்கிறீர்களோ அவர்களின் கையெழுத்து பெற வேண்டும்.
* முதல் தவணையை பணமாகவோ அல்லது செக் மூலமாகவோ செலுத்தலாம்.
* பின்னர் உங்களுக்கு கணக்கு தொடங்கப்பட்டதற்கான ஆவணங்கள் வந்து சேரும்


பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகள்..
ஓராண்டுக்கு முன்னரே பணத்தை எடுத்தால் எந்த பலனும் இருக்காது.
1 முதல் 3 ஆண்டுகளுக்குள் எடுத்தால் செலுத்திய தொகையில் 2% அபராதமாகப் பிடிக்கப்படும்.
3 முதல் 5 ஆண்டுகளில் திரும்பப் பெற்றால் மொத்த பணத்தில் 1% அபராதம் பிடிக்கப்படும்.