சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ஃபிக்சட் டெபாசிட்  (Fixed deposits (FDs)) நல்ல தேர்வு. சில வங்கிகள் 8% வரை வட்டி வழங்குகின்றனர். அதன் விவரத்தை இங்கே காணலாம். 


வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருப்பது நிதி சார்ந்த பாதுகாப்புகளை வழங்கும். ஒவ்வொரு மாதமும் சேமிப்பது சிறந்தது என  நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 


அவசரகால நிதி தேவைகளை சமாளிக்க சிறுசேமிப்பு திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். அதற்கு ’Fixed deposits’ சிறந்த தேர்வாக இருக்கும் என்பது நிபுணர்களின் தேர்வாக இருக்கிறது. ஃபிக்சட் டெபாசிட் அல்லது நிலையான வைப்பு நிதி என்ற அழைக்கப்படுகிறது. இந்த முறையிலான சேமிப்பு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. நிலையான வைப்பு நிதி பல நன்மைகளை கொண்டிருக்கிறது. நீண்ட காலத்துக்கு முதலீடு செய்து அது முதிர்ச்சி அடையும்போது முதலீட்டாளர்கள் வட்டி மற்றும் அசல் தொகை இரண்டையும் பெறுவார்கள். ரூ.5 லட்சம் வரையிலான வைப்பு நிதிகளுக்கு இந்திய வைப்பு காப்பீட்டு உத்தரவாதக் கழக்கத்தின் காப்பீடும் வழங்கப்படுகிறது. எந்தவித ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்யும் திட்டம் இருப்பவர்களுக்கு நிலையான வைப்பு நிதி சிறந்த தேர்வாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. நிலையான வைப்பு நிதி திட்டத்தில் அதிக ரிஸ்க் கிடையாது. 



Fixed Deposit: ஃபிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்ய ஐடியா இருக்கா? அதிக வட்டி வழங்கும் வங்கிகள் லிஸ்ட்!


ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 8% வரை வட்டி வழங்கும் வங்கிகள் லிஸ்ட் (பிப்ரவரி, 2025)


Small Finance Banks:



  • யூனிட்டி ஸ்மால் ஃபினான்ஸ் வங்கி (Unity Small Finance Bank)  – 9.00% (1001 நாட்கள்)

  • நார்த் -ஈஸ்ட் ஸ்மால் ஃபினான்ஸ் வங்கி (NorthEast Small Finance Bank) – 9.00%  (18 மாதங்கள் 1 நாள் -  36 மாதங்கள்)

  • Suryoday Small Finance Bank – 8.60% (5 ஆண்டுகள்)

  • ESAF Small Finance Bank – 8.38% (888 days)

  • ஜனா ஸ்மால் ஃபினான்ஸ் வங்கி (Jana Small Finance Bank) – 8.25% ( ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை)

  • ஈக்விடாஸ் வங்கி (Equitas Small Finance Bank) – 8.25% (888 நாட்கள்)

  • உஜ்வான் வங்கி (Ujjivan Small Finance Bank) – 8.25% (12 மாதங்கள்)

  • AU Small Finance Bank – 8.10% (18 மாதங்கள்)

  • Utkarsh Small Finance Bank – 8.50% (2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் 1500 நாட்கள்) 


தனியார் துறை வங்கிகள்





  • Bandhan Bank – 8.05% (1 ஆண்டு)

  • RBL Bank – 8.00% (500 நாட்கள்)

  • YES Bank – 8.00% (18 மாதங்கள்)

  • IDFC First Bank – 7.90% (400 - 500 நாட்கள்)

  • DBS Bank – 7.50% (376 - 540 ஆண்டுகள்)


பொதுத்துறை வங்கிகள்:



  • சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India) – 7.50% (1111 நாட்கள்; 3333 நாட்கள்)

  • பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா (Bank of Maharashtra) – 7.45% (366 நாட்கள்)

  • பேங்க் ஆஃப் இந்தியா (Bank of India) – 7.30% (400 நாட்கள்)

  • பஞ்சாப் & சிந்து வங்கி (Punjab & Sind Bank) – 7.45% (555 நாட்கள்)

  • கனரா வங்கி (Canara Bank) – 7.40% (3 ஆண்டுகள் -5 ஆண்டுகள்)


வங்கிகளில் நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் மாற்றத்திற்கு உட்பட்டது. திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ள அருகில் உள்ள வங்கிகளை அணுகலாம். ஆதார் அட்டை, KYC தேவையான ஆவணங்களுடன் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை தொடங்க முடியும். வங்கிகளின் அதிகாரப்பூர்வ வலைதளங்களிலும் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகித விவரங்களை அறியலாம். சில வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கு 8% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. சில வங்கிகள்,மூத்த குடிமக்களுக்கு 9% வரை வட்டி வழங்குகிறது.