குழந்தைகளின் கல்வித்தேவை  மற்றும் ஆயுள் முழுவதும் அவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் எஸ்பிஐ வங்கி SBI Life – Smart Champ Insurance மற்றும் SBI Life – Smart Scholar என்ற இன்சூரன்ஸ் திட்டத்தைக்கொண்டுள்ளது.


வீட்டில் குழந்தைகள் பிறந்துவிட்டாலே அடுத்து என்ன செய்யப்போகிறோம்? அவர்களுக்கான எதிர்காலத் தேவைகளை எப்படி நிறைவேற்றப்போகிறோம்? என்ற பல கேள்விகள் அனைத்துப் பெற்றோர்கள் மனதில் எழக்கூடும். குறிப்பாக குழந்தைகள் வந்தபிறகு தான் சிலருக்கு சேமிக்க வேண்டும் என்ற பழக்கமே ஆரம்பிக்கிறது. இதற்காகவே வங்கி, தபால் நிலையங்களில் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற எதிர்காலத்தேவைகளை நிறைவேற்ற பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. அந்தவரிசையில் பாரத ஸ்டேட் வங்கியும் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு இரண்டு இன்சுரன்ஸ் திட்டங்களைக் கொண்டுள்ளது. குழந்தை பிறந்தது முதல் குறிப்பிட்ட சில வயது வரை SBI Life – Smart Champ Insurance மற்றும் SBI Life – Smart Scholar நிச்சயம் பயனளிக்கும் எனக்கூறியுள்ளது. இந்நேரத்தில் அதன் சிறப்புகள் குறித்து நாமும் அறிந்துகொள்வோம்.



எஸ்பிஐ லைப் -ஸ்மார்ட் சேம்ப் இன்சுரன்ஸ் ப்ளான் ( SBI Life – Smart Champ Insurance)


குழந்தைகளின் கல்வித்தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் எஸ்பி வங்கி லைப் – ஸ்மார்ட் சேம்ப் இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தை கொண்டுள்ளது.


தங்களது குழந்தைகளின் வயதிற்கேற்ப இந்த பாலிசியை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஒற்றை முறை பிரீமியம் என கட்டண முறைகளைத் தேர்வு செய்துகொள்ளலாம். இந்த பாலிசியின் கீழ் குழந்தைக்கு 18, 19, 20 மற்றும் 21 வயதை அடையும்போது 25 சதவிகிதம் வரை போனஸ் பெற்றுக்கொள்ளமுடியும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது.  மேலும் வருமான வரி சலுகைகள் மற்றும் வரி விலக்குகளையும் இந்த பாலிசி நமக்கு வழங்குகிறது. குறிப்பாக பாலிசிதாரர்களின் நெகிழ்வுத்தன்மைக்கு ஏற்றவாறு பிரீமியம் செலுத்தக்கூடிய வசதிகள் இருப்பதால், குடும்ப பொருளாதார சூழலுக்கு ஏற்றவாறு நாம் பணத்தைக்கட்ட முடியும். எனவே இந்த பாலிசி குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவியாக இருக்கும் என எஸ்பிஐ வங்கி நிர்வாகம் கூறுகிறது.  மேலும் இந்த பாலிசி ஒரு தனிநபர், நான் லிங்க்டு, பார்ட்டிசிபேட்டிங் மற்றும் லைஃப் இன்ஸ்சுரன்ஸ் சேமிப்பு திட்டமாகவும் உள்ளது.


எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் ஸ்காலர்( SBI Life – Smart Scholar)


இந்த பாலிசியின் மூலம்  பாலிசிதாரர்கள் முதலீடு செய்யப்பட்ட பணத்தின் மீது சந்தைத் தொடர்புடைய லாபங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளுக்கான ஆயூள் காப்பீட்டு பாதுகாப்பு என இரண்டு பலன்களைப் பெறக்கூடிய வசதிகள் உள்ளது. இத்திட்டத்திற்கான பிரீமியம் தொகை ஆண்டிற்கு ரூபாய் 24 ஆயிரம் என உள்ளது. குழந்தைகளின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப பண்டுகளிடையே மாற்றம் செய்துக்கொள்ள முடியும். பாலிசிதாரர்கள் இந்த பாலிசியின் ஐந்தாம் ஆண்டு இறுதிவரை முதலீடு செய்த பணத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ திரும்பப்பெற முடியாது. அதே நேரத்தில் பாலிசியின் 6-வது ஆண்டிலிருந்து ஓரளவிற்கு பணத்தை திரும்பி பெற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறையைக்கொண்டுள்ளது.



எனவே மேற்கண்ட இந்த இரண்டு இன்சூரன்ஸ் திட்டங்களும் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு எஸ்பிஐ வங்கி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மற்ற பாலிசிகளில் பெற்றோர்கள் அவர்கள் தேவைப்படும்போது பணத்தை எடுத்துக்கொள்ளும் நடைமுறைகள் உள்ள நிலையில் ஆனால் இதில் அப்படி மேற்கொள்ளமுடியாது. முற்றிலும் இதில் முதலீடு செய்யக்கூடிய பணம் குழந்தைகளுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்ளக்கூடிய வகையில் உள்ளது.