எல்.ஐ.சி. ஜீவன் ஆனந்த் திட்டத்தின் கீழ் தினசரி 76 ரூபாய் முதலீட்டில்  10.33 லட்சம் ரூபாயை ஈட்ட முடியும். இத்திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் முதலீடு மற்றும் காப்பீடு ஆகிய இரண்டின் பலனையும் பெற முடியும்.


இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் திட்டம் முதலீட்டாளர்களுக்கு சிறந்த எதிர்காலத்திற்கு சேமிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் நீண்ட கால முதலீட்டிற்கான ஒரு சிறந்த நிறுவனமாகும். இந்நிறுவனத்தின்  ஜீவன் ஆனந்த் திட்டம் முதலீட்டாளர்களின் சிறிய சேமிப்புப் பணத்தை முதிர்வு காலத்தில் ஒரு பெரிய தொகையாக மாற்ற உதவுகிறது. பணத்தை எங்காவது முதலீடு செய்து அதிக வருமானம் ஈட்ட விரும்புபவர்களுக்கான  சிறப்பான திட்டமாக இது பார்க்கப்படுகிறது. . 


18 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய எந்த இந்திய குடிமக்களும் இந்த திட்டத்தில் இணையலாம். முதிர்வு நேரத்தில் உறுதியான வருமானத்தை வழங்கும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்.  இந்த பாலிசியானது முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை இரண்டு வெவ்வேறு கால இடைவெளிகளில் இரண்டு போனஸாக வழங்குகிறது.


பாலிசியின் சிறப்பம்சங்களில் ஒன்று, பிரீமியம் காலமும் பாலிசி காலமும் - அதாவது பாலிசி முதிர்ச்சியடையும் வரை பிரீமியம் செலுத்தப்பட வேண்டும். பாலிசியில் முதலீடு செய்பவர்கள் குறிப்பிட்ட வருடங்களுக்கு தொடர்ந்து முதலீடு செய்த பிறகு போனஸ் பெறுவார்கள். இத்திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் முதலீடு மற்றும் காப்பீடு ஆகிய இரண்டின் பலனையும் பெற முடியும். ஒரு நாளைக்கு 76 ரூபாய் என்ற அளவில் முதலீடு செய்ய வேண்டும். அடுத்த 21 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.5,63,705 ஆக இருக்கும். திட்டத்தின் முதிர்வுக் காலத்தில் போனஸ் தொகையுடன் சேர்த்து உங்களுக்கு மொத்தம் 10.33 லட்சம் ரூபாயை க்ளைம் செய்ய முடியும். இவ்வாறு சேமிப்பதன் மூலம் ஓய்வு காலத்தில் நல்ல பலன்களைப் பெற முடியும். முதலீட்டாளர்கள் எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி திட்டத்தில் நீங்கள் எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்கிறீர்களோ அவ்வளவு அதிகப் பயன்களை எதிர்பார்க்கலாம்.


எதிர்பாராத விதமாக முதலீட்டாளரின் மரணம் ஏற்பட்டால், எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் பாலிசியானது, தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டவர்களுக்கு (Nominees) தகுந்த அளவு வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது. எல்ஐசி திட்டத்தில் குறைந்தபட்ச காப்பீடு தொகை ரூ.1 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய ரிஸ்க் எதுவும் இல்லாமல் குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை எதிர்பார்க்கும் யாரும் எல்.ஐ.சியின் ஜீவன் ஆனந்த் பாலிசியை எடுத்து பயன்பெறலாம்.