ஒரே பாலிசியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் எல்.ஐ.சி நிறுவனம் ஆரோக்கிய ரக்சா என்ற மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.


இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் ( LIC- Life insurance corporation) மக்களுக்கு அவ்வப்போது பல்வேறு திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவருகிறது. அதற்கேற்றால் போல அனைத்துத் தரப்பட்ட மக்களும் தங்களுடைய எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு எல்.ஐ.சியில் ஏதாவது பாலிசியினைத் தொடங்க வேண்டும் என்று நினைப்பார்கள். குறிப்பாக பெண்களுக்கான திட்டம், பென்சன் திட்டம், குழந்தைகளுக்கான திட்டம், மருத்துவக்காப்பீட்டு திட்டம் போன்றவற்றில் பிரிமியம் தொகையினைச் செலுத்தி பயன்பெற்று வருகின்றனர். இதுப்போன்ற பாலிசிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றால் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் தனித்தனியாக பாலிசியில் இணைய வேண்டியிருக்கும். ஆனால் தற்பொழுது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஒரே பாலிசியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் கடந்த ஜூலை 19 ஆம் தேதி முதல் ஆரோக்கிய ரக்சா என்ற மருத்துவக்காப்பீட்டு திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பாலிசி மருத்துவ அவசர தேவைகளுக்கு நிதி ஆதரவு வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. குறிப்பாக எதிர்பாராத, அதிக மருத்துவ செலவுகளிலிருந்து உங்களை பாதுகாப்பதன் மூலம் உங்களுடைய உடல்நலம், நோய் மற்றும் திடீர் செலவுகளுக்கும் இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் உதவுகிறது.





குறிப்பாக தற்பொழுது கொரோனா தொற்றின் தாக்கம் மக்களைப் பாடாய் படுத்தி வரும் நிலையில்,  ஆரோக்கிய ரக்சா மருத்துவக்காப்பீட்டு திட்டம் நிச்சயம் பயனுள்ளதாக அமைகிறது.  இதில் பாலிசிதாரர்கள்  18 முதல் 65 வயது வரை உள்ள கணவன் அல்லது மனைவி, பெற்றோர் ஆகியோர் ரக்சா பாலிசியினை பயன்படுத்திக்கொள்ளலாம். இதோடு 91 நாட்கள் முதல் 20 வயதிலான குழந்தைகளையும் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்துக்கொள்ளலாம். இந்த மருத்துவப்பாலிசியில் பாலிசிதாரரின் பெற்றோருக்கு 80 வயது வரையிலும், குழந்தைகளுக்கு 25 வயது வரையிலும் பாதுகாப்பு கிடைக்கும்.


ஆரோக்கிய ரக்சா பாலிசியினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?





எல்.ஐ.சி நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஆரோக்கிய ரக்சா பாலிசியினை health checkup benefit, medical management benefit, major surgical benefit, hospital care benefit, day care procedure, ambulance rent, போன்ற அனைத்து மருத்துவத்தேவைகளையும் பாலிசிதாரர்களுக்கு நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. மேலும் ப்ளக்சிபல் ப்ரீமியம் தொகை செலுத்துவதற்கான வசதியும் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும் பாலிசியின் நன்மைகளையும் பிளெக்ஸிபிள் முறையில் கிளையம் செய்துக்கொள்ளலாம். இந்த பாலிசியில் ஒன்றுக்கு மேற்பட்டோர் இருக்கும் நிலையில், ஒரு வேளை துர்திஷ்டவசமாக ஒருவர் இறந்துவிட்டால், மற்றவர்களுக்கு பிரிமீயத்தில் சலுகை அளிக்கப்படும்.  மேலும் தற்பொழுது எல்.ஐ.சி நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஆரோக்கிய ரக்சா பாலிசியினை முழு விபரங்களை   https://licindia.in./ என்ற இணைய தளப்பக்கத்திற்கு சென்று அறிந்துக்கொள்ளலாம்.