ITR filing deadline: வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை நீட்டிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதை, வருமான வரித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
வருமான வரித்துறை அட்வைஸ்:
வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய நபர்கள், கடைசி நேர அவசரங்களை தவிர்க்க முன்கூட்டியே கணக்கை தாக்கல் செய்யும்படி, வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது. வரும் 15ம் தேதி அதாவது திங்கட்கிழமை நள்ளிரவுடன் வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிய உள்ள நிலையில், தற்போது வரை சுமார் 6 கோடி பேர் தங்களது வருமான விவரங்களை பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அபாராதம் இன்றி வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளையுடன் முடிய உள்ளது.இந்த அவகாசம் நீட்டிக்கப்படும் என்பதற்கான எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.
அவகாசம் நீட்டிக்கப்படுமா?
நேற்று மாலை வரை எத்தனை பேர் வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளனர் என்ற விவரங்களை, வருமான வரித்துறை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்கில் வெளியிட்டுள்ளது. வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், 24 மணி நேரமும் இயங்கக் கூடிய உதவி மையத்தை மக்கள் தாராளமாக அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி அழைப்புகள், லைவ் சாட்ஸ், வெப் செசன்கள் மற்றும் ட்விட்டர் மூலமும் பொதுமக்களுக்கு உதவ தயாராக இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆனால், அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பான எந்தவித தகவலும் அதில் இல்லை.
தொடர்ந்து அதிகரிக்கும் ஐடிஆர்
முன்னதாக கடந்த ஏப்ரல்-மே மாத காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி முறையை தொடர்ந்து, 2024-25 நிதியாண்டிற்கான வருமான வரி விவரங்களை தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஜுலை 31ம் தேதியன்றிலிருந்து செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் கூடுதல் அவகாசம் வழங்கப்படமாட்டாது என கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாகவே வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உதாரணமாக 2022-23 நிதியாண்டிற்கு 6.77 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்த நிலையில், 2023-24 நிதியாண்டில் 7.28 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. காலதாமதமாக வரி செலுத்தினால், ரூ.5 லட்சம் வரை வருவாய் இருப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாயும், அதற்கும் மேலான வருவாய் இருப்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வருமான வரி கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்வது எப்படி?
- பான் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி வருமான வரித்துறை போர்ட்டலை அணுகவும்
- தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டைத் தேர்வுசெய்யவும் (எ.கா., நிதியாண்டு 2024-25க்கான AY 2025-26 ) மற்றும் ஆன்லைன் தாக்கல் முறையைத் தேர்ந்தெடுக்கவும்
- உங்களுக்கு பொருந்தக்கூடிய நிலையைத் தேர்ந்தெடுக்கவும் (எ.கா., தனிநபர், HUF)
- வருமான ஆதாரங்கள் மற்றும் வரம்புகளின் அடிப்படையில் சரியான படிவத்தைத் தேர்வுசெய்யவும் (எ.கா., ₹50 லட்சம் வரை வருமானம் உள்ள சம்பளம் பெறும் நபர்களுக்கு ITR-1 )
- வருமானக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காரணத்தைக் குறிப்பிடவும் (எ.கா., அடிப்படை விலக்கு வரம்பிற்கு மேல் வருமானம், பணத்தைத் திரும்பப் பெறுதல்)
- தனிப்பட்ட விவரங்கள், வருமான ஆதாரங்கள், கழிவுகள் மற்றும் வங்கி விவரங்கள் உட்பட தேவையான அனைத்து தகவல்களையும் நிரப்பவும். இவற்றில் பெரும்பாலானவை முன்பே நிரப்பப்பட்டிருக்கலாம். தேவைக்கேற்ப சரிபார்த்து புதுப்பிக்கவும்
- பழைய வரி முறையைப் பயன்படுத்தி விலக்குகளைப் பெற தனிப்பட்ட தகவல் பிரிவில் "ஆம்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
- நிரப்பப்பட்ட படிவத்தை ஆய்வு செய்து விவரங்களின் துல்லியத்தை உறுதிப்படுத்தவும்
- வரிப் பொறுப்பு இருந்தால், மீதமுள்ள தொகையை ஆன்லைனில் செலுத்துங்கள்
- சரிபார்க்கப்பட்டவுடன் உங்கள் வருமான வரிப் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்
- ஆதார் OTP, நெட் பேங்கிங் அல்லது பிற முறைகளைப் பயன்படுத்தி 30 நாட்களுக்குள் உங்கள் ரிடர்னை சரிபார்க்கவும் . தவறினால் ரிடர்ன் செல்லாததாகிவிடும்.
தேவையான ஆவணங்கள்:
- பான் கார்டு (ஆதார் உடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்)
- ஆதார் அட்டை
- படிவம் 16 (முதலாளியிடம் இருந்து)
- சம்பளச் சீட்டுகள்
- வங்கி அறிக்கைகள்/பாஸ்புக்
- வட்டி சான்றிதழ்கள் (வங்கிகள், தபால் அலுவலகம்)
- படிவம் 26AS (வரிக் கடன் அறிக்கை)
- வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) மற்றும் வரி செலுத்துவோர் தகவல் சுருக்கம் (TIS)
- முதலீட்டுச் சான்றுகள் (பிரிவு 80C, 80D, போன்றவற்றின் கீழ் விலக்குகளுக்கு)
- வாடகை ரசீதுகள் (HRA கோரினால்)
- வீட்டுக் கடன் வட்டிச் சான்றிதழ் (பொருந்தினால்)
- வணிகம் தொடர்பான ஆவணங்கள் (சுயதொழில் செய்பவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு