Investment Tips: ஐடிஆர் தாக்கல் செய்யும் போது வரி செலுத்த வேண்டும் என்றால், தொகையை கழிக்க TDS செலுத்தினால் போதுமானது.


அஞ்சலக திட்டங்களின் மீதான வருமான வரி:


அஞ்சல் அலுவலகங்கள் வழங்கும் அனைத்து சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களும் இந்திய அரசால் செயல்படுத்தப்படுகின்றன. எனவே, இந்த அஞ்சல் அலுவலக திட்ட முதலீடுகள் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகின்றன. இந்த அஞ்சல் அலுவலகத் திட்டங்களில் சில வருமான வரிச் சட்டத்தின் கீழ் வராதவை மற்றும் முழுமையாக விலக்கு கொண்டவையாகும். சில திட்டங்கள் மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கு டிடிஎஸ் (மூலத்தில் வரி விலக்கு) செலுத்த வேண்டும். அஞ்சலக திட்டத்தில் பரிவர்த்தனை தொகை குறிப்பிட்ட வரம்பை மீறினால் TDS பொருந்தும். குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படமாட்டாது. 


TDS என்றால் என்ன?


”வருமான மூலத்தில் வரி விலக்கு” TDS எனப்படும். ஒருவரது வருமானத்திற்கு முன்கூட்டியே வருமான வரி வசூலிக்கும் முறை தான் TDS. இதனால், வரி ஏய்ப்பை தடுக்க முடியும். வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யும் போது இந்த முன் கழிக்கப்பட்ட டிடிஎஸ்-ஐ திரும்பப் பெறலாம். ஐடிஆர் தாக்கல் செய்யும் போது வரி செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால்,  அந்த தொகையை TDS மூலம் கழிக்கலாம். வரி விதிக்கப்படாவிட்டால், டிடிஎஸ் தொகை மீண்டும் பயனாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.


வரி விதிக்கக்கூடிய & வரி விதிக்கப்படாத அஞ்சலகத்  திட்டங்கள்: 


அஞ்சல் அலுவலக ரெகர்ரிங் டெபாசிட்:


பொதுவாக குடிமக்களுக்கான TDS விலக்கு வரம்பு (60 வயதுக்கு கீழ்) ரூ. 40,000. அதுவே மூத்த குடிமக்களுக்கான (60 வயது அல்லது அதற்கு மேல்) வரம்பு ரூ. 50,000.


அஞ்சல் அலுவலக டைம் டெபாசிட்:


வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் (வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 80C), ஐந்தாண்டு அஞ்சல் அலுவலக டைம் டெபாசிட் திட்டத்தில் ரூ.1.50 லட்சம் வரை வரிவிலக்கு வழங்கப்படும். ஒரு வருடம், இரண்டு ஆண்டுகள் மற்றும் மூன்று வருடங்கள் கொண்ட கால டெபாசிட்டுகளுக்கு வரி பொருந்தும். இந்த முதிர்வு திட்டங்களில் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி செலுத்த வேண்டும்.


அஞ்சல் அலுவலக மாத வருமானத் திட்டம்: 


இந்தத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் வட்டி ரூ. 40,000 வருமான வரிக்கு உட்பட்டது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படாது.


மஹிலா சம்மன் பச்சத் பத்ரா யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: 


மகிளா சம்மன் பச்சத் பத்ரா யோஜனா டிடிஎஸ்க்கு உட்பட்டது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கு (SCSS) பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), பொது வருங்கால வைப்பு நிதி (PPF):


NSC திட்டத்தின் கீழ், ஒரு நிதியாண்டில் ரூ.1.50 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு வரி விலக்கு உண்டு. இந்தக் கணக்கில் கிடைக்கும் வட்டிக்கும் TDS பொருந்தாது. PPF திட்டமும் வரி விலக்கின் கீழ் வருகிறது.


கிசான் விகாஸ் பத்ரா:


இந்தத் திட்டம் வருமான வரி விலக்கின் கீழ் வராது. ஆனால், திட்டத்தின் முதிர்வு காலத்தில் பெறப்பட்ட தொகையில் TDS குறைக்கப்படாது.