Post Office Savings Scheme: அஞ்சல் அலுவலகத்தில் உள்ள டைம் டெபாசிட் திட்டம் தொடர்பான விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.


டைம் டெபாசிட் திட்டம்:


 அஞ்சல் அலுவலகங்களில் 5 ஆண்டுகளுக்கான சேமிப்பு திட்டங்கள் பல உள்ளன. முதலீட்டாளர்களும் தபால் அலுவலக திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் போஸ்ட் ஆஃபீஸ் உள்ள டைம் டெபாசிட் திட்டம் என்பது,  5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் சுமார் ரூ.4,50,000 வட்டியைப் பெறக்கூடிய திட்டமாகும்.


நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் அரசு சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தபால் நிலையத்தின் பல திட்டங்கள் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளிக்கும். போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் அத்தகைய சிறு சேமிப்பு திட்டமாகும். எந்தவொரு குடிமகனும் 5 ஆண்டுகளுக்கு அஞ்சல் அலுவலக திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் முதலீட்டாளர்கள் 7.50 சதவீத வட்டியைப் பெறுவார்கள். முதலீட்டாளர்கள் 80சியின் கீழ் ரூ.1.50 லட்சம் வரை வரிவிலக்கு பெறலாம்.


அரசுத் திட்டமான அஞ்சல் அலுவலக நேர வைப்புத் தொகை திட்டத்தில் (Time Deposit Scheme), முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். அதில் அவ்வப்போது வட்டி கூடிக் கொண்டே இருக்கும். இந்த திட்டம் போஸ்ட் ஆபிஸ் எஃப்டி என்றும் அழைக்கப்படுகிறது. நேர வைப்புத்தொகையின் கீழ், நான்கு வகையான காலங்களுக்கு வட்டி வழங்கப்படுகிறது.


கணக்கு விவரங்கள்:


ஒருவர் அல்லது மூன்று நபர்கள் ஒரே நேரத்தில் போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் கணக்கைத் திறக்கலாம். போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்ட்ன் கீழ், 3 பேர் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ கணக்கைத் திறக்கலாம். இந்தத் திட்டத்தில், குறைந்தபட்சம் ரூ. 1000 முதலீட்டை ரூ.100 இன் மடங்குகளில் செய்யலாம். முதலீடு செய்ய வேண்டிய அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை. இந்தத் திட்டத்தின் கீழ், ஐந்து ஆண்டுகளுக்கு வருமான வரிப் பிரிவு 80C-ன் கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், ஆறு மாதங்களுக்கு முன் பணத்தை எடுக்க முடியாது.


எந்த காலகட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும்?


அஞ்சல் அலுவலக டைம் டெபாசிட் திட்டத்தின் கீழ், 



  • 1 வருட காலத்திற்கு 6.9% வட்டி கிடைக்கும்.

  • 2 வருட காலத்திற்கு 7.0% வட்டி கிடைக்கும்.

  • 3 வருட காலத்திற்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது.

  • 5 ஆண்டுகளுக்கு அஞ்சல் அலுவலக நேர வைப்புத் திட்டத்தின் கீழ், 7.5% வட்டி கிடைக்கும்.


வட்டியில் மட்டும் 4.5 லட்சம் சம்பாதிக்கலாம்


இந்தத் திட்டத்தின் கீழ் தினமும் ரூ.2,778 சேமித்து, ஒரு வருடத்திற்குப் பிறகு குறைந்தது ரூ.10 லட்சத்தை ஒரே நேரத்தில் முதலீடு செய்தால், வட்டியில் மட்டும் 5 ஆண்டுகளில் ரூ.4,49,948 சம்பாதிக்கலாம். அதாவது ஐந்து ஆண்டுகளில் மொத்த தொகை மட்டுமே, ரூ.14,49,948 ஆக உங்களுக்கு கிடைக்கும்.