பிஎஃப் பணத்தைப் பெறுவதற்கென சில வழிமுறைகள் உள்ளன. அதைப் பின்பற்றியே சந்தாதாரர்கள் தங்களின் பணத்தை வங்கிக் கணக்குகளில் பெற முடியும். இப்போதெல்லாம் ஆன்லைனிலேயே எளிய நடைமுறைகள் மூலம் இதனைச் செய்ய முடியும்.


ஆனால், சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் தாங்கள் தங்களின் பிஎஃப் கணக்குடன் இணைத்திராத வேறு வங்கிக் கணக்கில் பணத்தைப் பெற்றிட விரும்புகின்றனர். ஆனால், அதையும் எளிதாக செய்ய சில வழிமுறைகள் இருக்கின்றன. அதுவும் வீட்டில் இருந்தபடியே ஒரே சொடுக்கில் இதனைச் செய்துவிடலாம்.




இதோ வழிமுறைகள்..


* இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கான இணையதளத்திற்குச் செல்லுங்கள்.இதுதான் அந்த இணையப்பக்கம் epfindia.gov.in/memberinterface/
* உங்களின் லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்யுங்கள்.
* அங்கே மேனேஜ் 'Manage' என்றொரு ஆப்ஷன் இருக்கும். அதில் கேஒய்சி  'KYC' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* அதில்  'Documents' ஆப்ஷனை கிளிக் செய்து,  'Bank' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* பின்னர் வங்கிக் கணக்கையும், ஐஎஃப்எஸ்சி குறியீட்டையும் பதிவு செய்யவும்.
* சேவ் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* நீங்கள் அதை செய்தவுடன், கேஒய்சி அப்ரூவலுக்காக காத்திருக்கவும் என்ற தகவல் வரும்.
* அதன் பின்னர் உங்கள் நிறுவனத்தின் ஆவணத்துக்கான அடையாளங்களை அப்லோட் செய்யவும். உங்கள் ஆவணங்களை நிறுவனம் சரி பார்த்தபின்னர், பெண்டிங்க் கேஒய்சி என்ற ஸ்டேட்டஸ் டிஜிட்டலி அப்ரூவ்ட் ஸ்டேட்டஸ் என்று மாற்றவும். இது தொடர்பாக ஈபிஎஃப்ஓவிடம் இருந்தும் உங்களுக்கு குறுந்தகவல் வரும்.




பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு எவ்வளவு காலம் ஆகும்?


பிஎஃப் முதலீடு என்பது சிறந்த சேமிப்பு முறையாகும். ஆனால், ஒருவேளை உங்களுக்கு அதிலிருது பணத்தை எடுக்க வேண்டும் என நினைத்தால் 20 நாட்களுக்குள் அதனைப் பெற்றுக் கொள்ளலாம். இருப்பினும் கரோனா காலமென்பதால் சில மாறுதல்கள் இருக்கின்றன. இப்போதைய தருணத்தில் 3 முதல் 7 நாட்களில் பிஎஃப் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.