Home Loan Tips: புதிய வீட்டை மனைவி பெயரில் வாங்குவதால் கிடைக்கும் பல்வேறு நிதிப்பலன்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா?
புதியதாக வீடு வாங்க திட்டமா?
வீடு வாங்குவது என்பது பலரது முக்கிய கனவுகள்ல் ஒன்றாகும். இதற்காக பலர் சேமிப்பு திட்டங்களை மேற்கொள்கின்றனர். அப்போதுதான் ஏதாவது ஒரு சரியான காலகட்டத்தில் வீடு வாங்க முடியும். வீடு வாங்கும் போது, வீட்டின் விலையை தவிர மற்ற விஷயங்களுக்கு பணம் செலவழிக்க வேண்டும். ஆனால் மனைவி பெயரில் வீடு வாங்கினால் அதில் பல்வேறு பலன்களை பெறலாம். காரணம சமூகத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சொத்து வரி விலக்கு:
இதனால்தான் ஆண்களை விட பெண்களுக்கும் அரசு பல விஷயங்களில் சலுகைகளை அள்ளிக் கொடுக்கிறது. பெண்களுக்கு சொத்து வாங்க தனி விதிகளையும் அரசு வகுத்துள்ளது. பெண்களுக்கு குறிப்பாக சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் புதிய வீடு வாங்க திட்டமிட்டால், உங்கள் மனைவி பெயரில் வீட்டை வாங்கவும். அது உங்களுக்கு மிகவும் பயன் தரும். சொல்லலாம்
வீட்டுக் கடனுக்கு குறைந்த வட்டி
இந்தியாவில் பெண்களுக்கு முன்னுரிமை மற்றும் சலுகைகள் வழங்கப்படும் பல அம்சங்கள் உள்ளன. சொத்து வாங்குவதாக இருந்தால் மனைவி பெயரில் வாங்குவது நல்லது. உங்களுக்கு கடன் தேவைப்படும்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவில் உள்ள பல வங்கிகள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் ஆண்களை விட பெண்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குகின்றன. பல வங்கிகள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் குறிப்பாக பெண்களுக்காக பல திட்டங்களைக் கொண்டுள்ளன. உங்கள் மனைவி பெயரில் வீட்டுக் கடன் வாங்கினால் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் பெறலாம்.
முத்திரைக் கட்டணத்திலும் விலக்கு
ஒருவர் வீடு வாங்கும் போது, அதனை முறைப்படி பதிவு செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் முத்திரை கட்டணம் செலுத்த வேண்டும். முத்திரை கட்டணத்தாலும் உங்களுக்கு நிறைய பணம் செலவாகும். ஆனால் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆண்களை விட பெண்கள் குறைந்த முத்திரைக் கட்டணம் செலுத்தலாம் என்ற சலுகை உள்ளது.
ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு பொதுவாக 2 முதல் 3 சதவிகிதம் முத்திரை வரிச் சலுகை வழங்கப்படுகிறது. உதாரணமாக, டெல்லியில், ஆண்கள் 6% முத்திரை வரி செலுத்த வேண்டும், அதே சமயம் பெண்கள் 4% முத்திரை வரி செலுத்தினாலே போதுமானது. அதாவது ஆண்களை விட இரண்டு சதவிகிதம் குறைவாக வரி விதிக்கப்படுகிறது. உத்தரபிரதேசத்தில், ஆண்கள் 7% முத்திரை வரி செலுத்த வேண்டும், ஆனால் பெண்கள் 5% மட்டுமே செலுத்த வேண்டும்.
அதேநேரம், தமிழ்நாட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருதரப்பினருக்கும் ஒரே விதமான முத்திரைத்தாள் கட்டணம் மட்டுமே விதிக்கப்படுகிறது,