நிதித் திட்டமிடலில் ஆயுள் காப்பீட்டின் முக்கியத்துவத்தை குறைமதிப்பிட முடியாது. ஏனெனில், குடும்பத்தில் சம்பாதிப்பவருக்கு மரணம் ஏற்பட்டால் குடும்பத்தை நிதி ரீதியாக ஆயுள் காப்பீடே பாதுகாக்கிறது.


நீங்கள் இல்லாவிட்டாலும், உங்கள் குடும்பத்தின் நிதி சார்ந்த கவலைகள் கவனிக்கப்படுவதை உங்கள் ஆயுள் காப்பீட்டுக் கொள்கை உறுதி செய்யும். உங்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் கடன்கள், கடனை செலுத்துதல் மற்றும் நல்ல வாழ்க்கைத் தரத்தை தக்கவைத்தல் போன்ற நிதிச் செலவுகளை ஈடுகட்ட ஒரு நல்ல திட்டம் உதவும்.


பயனாளி அல்லது குடும்ப உறுப்பினர்களால் பின்னர், பெற்று கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்ட தொகைக்கு ஈடாக, ஒரு காப்பீட்டாளருக்கு நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பணம் செலுத்துகிறீர்கள். ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில், ஒரு நபரின் வயது மற்றும் ஆரோக்கியம் முக்கியமான பகுதியாகக் கருதப்படுகிறது. ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, அவருக்கு ​​உடல் ஆரோக்கிய பிரச்னைகள் குறைவாக இருக்கும். எனவே, ஆயுள் காப்பீட்டு பாலிசியின் பிரீமியம் செலவுகளிலும் அது தாக்குத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இளமையான மற்றும் ஆரோக்கியமான நபர் கட்ட வேண்டிய பிரீமியம் தொகை குறைவானதாக இருக்கும்.


நீங்கள் உங்களுக்கு ஏற்ற சரியான பாலிசியை எடுத்துள்ளதையும், கொள்கை நிபந்தனைகளை நீங்கள் நன்கு புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். காத்திருப்பு காலங்கள், விலக்கு உட்பிரிவுகள், செட்டில்மெண்ட் தொகை உள்ளிட்ட காரணிகளை கொண்டு நீங்கள் பாலிசியை எடுக்க வேண்டும். நீங்கள் இறக்கும் பட்சத்தில், உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க உதவும் கொள்கையை எப்படி தேர்வு செய்ய வேண்டும் போன்ற சில முக்கிய விஷயங்களை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.


பிரீமியம் தொகையை செலுத்துவதில் உள்ள ஆப்ஷன்கள்


பிரீமியம் தொகையை செலுத்துவதற்கான ஆப்ஷன்களும் திட்டங்களால் மாறுபடுகிறது. ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளுக்கான பிரீமியம் கட்டணம் உங்களின் நிதி இலக்குகள், தேவைகள் மற்றும் அது குறைவாக உள்ளதா ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நீங்கள் பாலிசியின் தொலைகையை செலுத்துவிடலாம். அல்லது பாலிசி பீரியட் முழுவதுமாக அதை செலுத்தலாம். அதேசமயம், யூனிட் லிங்க்ட் இன்சூரன்ஸ் பிளான் மற்றும் எண்டவுமெண்ட் பிளானிலும், கட்ட வேண்டிய தொகையை ஒரே தொகையாகவும் அல்லது குறிப்பிட்ட கால வரையும் அல்லது பாலிசி காலம் முழுவதும் செலுத்தும் ஆப்ஷன் உள்ளது.


வழக்கமான முறையில் பாலிசி தொகையை செலுத்தும் திட்டத்தை பொறுத்தவரை, பாலிசிதாரர் ஒவ்வொரு ஆண்டும் பிரீமியத்தை செலுத்த வேண்டும். வழக்கமான வருமான உத்தரவாதம் உள்ளவர்களுக்கு இத்தகைய திட்டம் மிகவும் பொருத்தமானது. குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு பாலிசி தொகையை செலுத்தும் திட்டத்தை பொறுத்தவரை, பாலிசி காலத்தின் முதல் சில ஆண்டுகளிலேயே மொத்த தொகையை செலுத்தும் ஆப்ஷன் உள்ளது. எனவே, வருமானம் அதிகமாகவோ அல்லது ஏற்ற இறக்கமாகவோ இருப்பவர்களுக்கு இத்திட்டம் பொருந்தும்.


அதிகமான தொகையை முதலீடு செய்ய விரும்புவோர் அல்லது போனஸ் தொகை போன்ற ஒரு பெரிய தொகை கிடைப்பவர்களுக்கு, ஒரே அடியாக பிரீமியத்தை செலுத்தும் ஆப்ஷன் பொருந்தும்.


பல்வேறு ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. அதில் பிரீமியம் தொகையை உங்கள் தேவைக்கேற்ப அமைத்துக்கொள்ளலாம். HDFC Life வழங்கும் Click to protect super term policy இது போன்ற ஒரு பாலிசி ஆகும். இந்த பாலிசியின் கீழ் மூன்று திட்டங்கள் உள்ளன. அதன்படி, உங்களின் விருப்பத்தைப் பொறுத்து பிரீமியங்கள் மாறுபடும். ஆண்டுதோறும் பிரீமியம் செலுத்தும் ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்யலாம். அதேபோல, அரையாண்டு, காலாண்டு அல்லது மாதாந்திரமாகவும் பிரீமியம் தொகையை செலுத்தலாம்.


ஆயுள் காப்பீட்டுக்கான வயது வரம்பு


காப்பீட்டுத் திட்டத்திற்கான அதிகபட்ச வயது காப்பீட்டாளரால் நிர்ணயிக்கப்படுகிறது. ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வயது வரம்பு 75 வயது முதல் 80 வயது வரை இருக்கும். 


ஆப்ஷன் பிளான் லைஃபின்கீழ், தனிநபர் ஒருவர் 84 வயதில் ஒரு பாலிசியை வாங்கலாம். லைஃப் பிளஸ் மற்றும் லைஃப் கோல் திட்டத்தை 65 வயதில் வாங்கலாம். மூன்று திட்டங்களிலும் அதிகபட்ச பாலிசி காலமானது நீங்கள் திட்டத்தை எந்த வயதில் வாங்குகிறீர்கள் என்பதை பொறுத்து 85 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படுகிறது.


விரிவான கவரேஜ் தரும் திட்டத்தை வாங்குங்கள்


அதிகபட்ச ஆண்டுகள் வரை நீடிக்கும் பாலிசி திட்டத்தையே ஒருவர் வாங்க வேண்டும். அதாவது, பாலிசிக்கான காலத்தை நீட்டிக்கும் வகையிலான திட்டம், விபத்து ஏற்பட்டு இறந்தாலோ நோய்வாய்ப்பட்டு இறந்தாலோ பணம் கிடைக்கும் வகையிலான திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.


HDFC Life's Click2Protect Super திட்டம் என்பது பங்கு சந்தையுடன் தொடர்பில்லாத, தனிநபருக்கான, ஆதிக அபத்து இல்லாத சேமிப்பு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். அதே சமயத்தில், உங்களுக்கு இத்திட்டத்தின் வழியாக எந்த கூடுதல் பலன்களும் கிடைக்காது. ஆனால், உங்களின் தேவைக்கேற்ற பாலிசிகளை வழங்குகிறது. லைஃப், லைஃப் பிளஸ் & லைஃப் கோல் ஆகிய மூன்று திட்டங்களில் இருந்து தேவைக்கேற்ப ஒரு திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.


மேலும், ஒருவர் ஆயுள் காப்பீட்டுக் கொள்கையில் காப்பீட்டுத் தொகையை பொறுத்தே திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். இறப்பு சம்பவம் நிகழும்போது, பாலிசி வைத்திருப்பவருக்கு முன்பே தீர்மானிக்கப்பட்ட தொகையைதான் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் வழங்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை வாங்கும்போது, ​​காப்பீடு செய்யப்பட்ட நபரின் மரணம் ஏற்பட்டால், நாமினிக்கு உறுதியளிக்கப்பட்ட தொகையைச் செலுத்த காப்பீட்டாளர் உத்தரவாதம் அளிக்கிறார். காப்பீட்டாளருக்கு பாலிசிதாரர் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகையைத் தீர்மானிக்கும் தொகைதான் இது.


பாலிசி காலத்தின் போது காப்பீட்டுதாரர், திடீரென மரணத்தால், நாமினிக்கு இறப்பு பலன் வழங்கப்படும். Click2Protect சூப்பர் டேர்ம் பாலிசியில் உள்ள லைஃப் திட்டத்தின் கீழ், பாலிசி காலத்தின் போது ஆயுள் காப்பீடு செய்யப்பட்டவர் இறந்தால் இறப்பு பலன் மொத்த தொகையாக செலுத்தப்படும். திட்டத்தில் உள்ள லைஃப் ஆப்ஷனின் கீழ் செலுத்திய மொத்த பிரீமியத்தில் 105 சதவீதம் வழங்கப்படும். 


அது மட்டுமின்றி, இந்த ஆப்ஷினின் கீழ் பாலிசிதாரருக்கு பாலிசி காலத்தின் போது இறப்பு பலன் தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாலிசி எடுத்தவருக்கு நோய் கண்டறியும் போதே தொதையை தர துரிதப்படுத்தப்படலாம். அதாவது, இத்திட்டத்தின் கீழ் நோயை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் இறப்பு பலன் முன்கூட்டியே கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


பாலிசி காலம் முடியும் வரை, பாலிசி எடுத்தவர் உயிரோடு இருந்தால், பாலிசி காலம் முடியும் போது தரப்படும் என உறுதி அளிக்கப்பட்ட தொகை திருப்பி அளிக்கப்படும். அதாவது, செலுத்தப்பட்ட மொத்த பிரீமியம் தொகையில் 100 விழுக்காடு தொகையும் திருப்பி தரப்படும். 


பிரீமியம் செலுத்தும் காலத்தின் போது பாலிசிதாரருக்கு பிரீமியம் தொகைக்கான கால அவகாசத்தை மாற்றுவதற்கான ஆப்ஷனும் உள்ளது. எடுத்த திட்டம் காலாவதியாகும்போது, ​​பாலிசிதாரர் தங்கள் பாலிசியின் காலத்தை நீட்டிக்கும் ஆப்ஷனை தேர்வு செய்யலாம். இந்த விருப்பத்தை அதிகபட்சம் ஐந்து முறை பயன்படுத்தலாம். Board approved underwriting policy-இன் அவை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.


கூடுதல் பலன்கள்


நீங்கள் எதிர்பாராத விதமாக இறந்தால், உங்கள் குடும்பத்திற்கு பணம் கிடைக்கும். நீங்கள் இல்லாமலும் வாழ முடியும் என்ற மன அமைதி கிடைக்கும். அந்த நன்மைகள் அனைத்து வகையான ஆயுள் காப்பீடுகளுக்கும் பொருந்தும். ​​பாலிசி வகை மற்றும் நீங்கள் பெறும் கவரேஜ் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் கூடுதல் நன்மைகள் மட்டும் மாறுபடும். அடிப்படை கவரேஜுடன் கூடுதல் பலன்கள், அதாவது உயிர் கொல்லி நோய் தொகை, தற்செயலான மரண பலன் தொகை, பிரீமியம் தொகை தள்ளுபடி, இயலாமை தொகை போன்ற பலன்கள் கிடைக்கும். சிறிய பிரீமியங்களைச் செலுத்துவதன் மூலமும் கூட இந்த கூடுதல் பலன்களை நீங்கள் பெறலாம்.


உதாரணமாக, Click2Protect சூப்பர் டேர்ம் பாலிசியில் லைஃப் ஆப்ஷன் கீழ் உயிர் கொல்லி நோய் பலன் தொகை வழங்கப்படுகிறது. பாலிசி காலத்தின் போது உயிர் கொல்லி நோயைக் கண்டறிந்தால், இறப்புக்கான காப்பீட்டுத் தொகை அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை வழங்கப்படும். 


ஆறு மாதங்களுக்குள் மரணம் ஏற்படும் நிலையால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது கண்டறியப்பட்டால் மட்டுமே, ஆயுள் உத்தரவாதம் அளிக்கப்பட்டவர் தீவிர நோய்வாய்ப்பட்டவராகக் கருதப்படுவார். நோய்க்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற இரண்டு சுதந்திரமான மருத்துவர்கள் இது தொடர்பாக சான்றிதழ் அளிக்க வேண்டும்.


விபத்தில் மரணம் ஏற்பட்டால், விபத்து மரண பலன், இறப்புப் பலன்களுடன் சேர்த்து, இறப்பிற்கு பிறகு அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட தொகைக்கு சமமான தொகை வழங்கப்படும். பாலிசி காலத்தின் போது, விபத்து ஏற்பட்டு மரணித்தாலோ அல்லது பாலிசி காலத்திற்குப் பிறகு மரணம் ஏற்பட்டால், விபத்து நடந்த நாளிலிருந்து 180 நாட்களுக்குள், விபத்து மரண பலன் வழங்கப்படும்.


Click2Protect சூப்பர் டேர்ம் பாலிசியானது, வாழ்க்கைத் துணைவர்களுக்கான காப்பீட்டு ஆப்ஷனையும் வழங்குகிறது. அதன்படி, நிலுவையிலுள்ள பாலிசி காலத்திற்கான அடிப்படைத் தொகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சதவீதத்திற்குச் சமமான இறப்புப் பலன் காப்பீட்டு தொகை வாழ்க்கைத் துணைவருக்கு கிடைக்கும். 


பாலிசி எடுத்தவர் திருமணமானவராக இருக்க வேண்டும். அவருக்கும் அவரது மனைவிக்கு இடையேயான வயது வித்தியாசம் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் இருக்க வேண்டும். மேலும், பாலிசி எடுத்தவரின் மனைவி அவருக்கு முன்பே இறந்தால், துணைவருக்கான கவரேஜ் ரத்து செய்யப்படும். கூடுதல் பலன்களும் வழங்கப்படாது.


விலக்குகளை நினைவில் கொள்ளவும்


ஆயுள் காப்பீட்டை பெறும் போது, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில பொதுவான விதிவிலக்குகள் உள்ளன. முதல் பாலிசி ஆண்டிற்குள் பாலிசிதாரர் தற்கொலை செய்துகொண்டால், நாமினிகள் க்ளெய்ம் தாக்கல் செய்ய பெரும்பாலான திட்டங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், பாலிசியின் ஒரு வருடத்திற்குள் காப்பீடு செய்யப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டால், பிரீமியத்தில் 80 சதவீதமோ அல்லது சரண்டர் தொகையோ, எது அதிகமோ அது தரப்படும். 


பாலிசியின் கீழ் தொடங்கப்பட்ட நாளிலிருந்து அல்லது பாலிசி புதுப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து 12 மாதங்களுக்குள் தற்கொலை காரணமாக மரணம் ஏற்பட்டால், பாலிசிதாரரின் நாமினி அல்லது பயனாளிக்கு குறைந்தபட்சம் 80 சதவீத தொகை பெற்ற கொள்ள உரிமை உண்டு. பாலிசி நடைமுறையில் இருந்தால், இறந்த தேதி வரை செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்கள் அல்லது இறந்த தேதியில் கிடைக்கும் சரண்டர் தொகை, எது அதிகமோ அது வழங்கப்படும்.