வரும் நாட்களில்,பணி மாறிய சந்தாதாரர்கள் இபிஎஃப்-ல் இருந்து வெளியேறி மீண்டும் இணைவது கட்டாயமில்லை என்று வருங்கால வைப்பு நிதி தெரிவித்துள்ளது. சந்தாதாரகள் ஒரே இபிஎஃப் அக்கவுண்ட் நம்பரை நிர்வகிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.    


வருங்கால வைப்பு நிதி அமைப்பு  மையப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப மேம்படுத்த இருப்பதால் சந்தத்தாரின் அனைத்து கணக்குகளும் ஒன்றிணைக்கப்படும். இதன், காரணமாக, பணி மாறுதலின் போது பழைய பிஎஃப் கணக்கை புதிய நிறுவனத்துக்கு மாற்ற வேண்டிய சூழல் எழாது. 




 வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தலைமை முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் வாரியத்தின் 229-வது கூட்டம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் புதுதில்லியில் முன்னதாக  நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கீழ்காணும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 


பணியாளர்கள், முதலாளிகள் மற்றும் அரசு தரப்பில் இருந்து வாரியத்தின் உறுப்பினர்களை உள்ளடக்கிய நான்கு துணைக் குழுக்களை அமைப்பது.


2020-21-ம் ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பின் செயல்பாடு குறித்த வரைவு 68-வது ஆண்டு அறிக்கையை, மத்திய அரசின் மூலம் நாடாளுமன்றத்தின் முன் வைக்க ஒப்புதல்.




சி-டாக் மூலம் மையப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்புகளை மேம்படுத்துவதற்கு ஒப்புதல். இதன் காரணமாக, ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் இபிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் கணக்குகளை புதிய நிறுவனத்துடன் இணைக்கவேண்டிய சூழல் ஏற்படாது.  


இந்திய அரசால்அறிவிக்கப்பட்ட முதலீட்டு மாதிரியில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து சொத்து வகைகளிலும் முதலீடு செய்வது குறித்து முடிவெடுக்க நிதி முதலீடு மற்றும் தணிக்கைக் குழுவிற்கு அதிகாரம் வழங்க வாரியம் முடிவு செய்தது. 


முன்னதாக, இபிஎஃப் அமைப்பின் தற்காலிக ஊதிய தரவு வெளியிடப்பட்டது. இதில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 15. 41 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட, செப்டம்பரில் 1.81 லட்சம் பேர் கூடுதலாக இணைந்துள்ளனர்.


இந்த 15.41 லட்சம் பேரில், சுமார் 8.95 லட்சம் பேர் முதல் முறையாக சேர்ந்த புதிய உறுப்பினர்கள். சுமார்  6.46 லட்சம் பேர், வேலைகள் மாறியதால் வெளியேறி மீண்டும் இணைந்துள்ளனர்.