முதலீடுகளை மேற்கொள்வதற்கான சிக்கலான மாதமாக மார்ச் மாதம் கருதப்படுகிறது. நிதியாண்டின் முடிவு மார்ச் மாதம் நிகழ்வதால், இந்த மாதத்தின் மீது ஏற்கனவே அதிகளவிலான இறுதி நாள்கள் குவிந்து விடுகின்றன. ஆனால், பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா முதலான திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு மார்ச் 31 என்ற இறுதி நாள் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. 


ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரித்தி யோஜனா முதலான திட்டங்களில் கணக்கு உருவாக்குவதற்கான குறைந்தபட்ச தொகை, அதிகபட்ச வைப்புத் தொகை முதலானவை தக்கவைக்கப்பட வேண்டும். எனவே ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும், குறிப்பாக மார்ச் 31 அன்றிற்குள், உங்கள் கணக்கில் குறைந்தபட்ச வைப்பை நீங்கள் செலுத்தவில்லை என்றால், உங்கள் கணக்கு செயல்படாமல் இருப்பதாகக் கருதப்படும். 



உங்கள் பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரித்தி யோஜனா முதலான திட்டங்களில் உங்கள் குறைந்தபட்ச வைப்புத் தொகையை செலுத்தாதவர்கள் இந்த மாதத்தின் இறுதிக்குள் உங்கள் தொகையை செலுத்த வேண்டும். ஏற்கனவே தொகையைச் செலுத்தியவர்கள், இதுகுறித்த வருந்த வேண்டியதில்லை. 






சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆண்டுதோறும் கணக்கிடப்படும் வட்டியின் விகிதம் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஆண்டுக்கு 7.6 சதவிகிதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கணக்குகளில் குறைந்தபட்சமாக 250 ரூபாய் எனவும், அதிகபட்சமாகவும் 1.5 லட்சம் ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டு அதனை ஒரு நிதியாண்டில் செலுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அதிகளவிலான தொகையில் 50 ரூபாய்களை ஒரே நேரத்தில் செலுத்தலாம். மேலும், ஒரு நிதியாண்டில் வைப்புத் தொகையை எத்தனை முறை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். 



பொது வருங்கால வைப்பு நிதியில் பணம் செலுத்துபவர்களுக்குக் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஆண்டுக்கு 7.1 சதவிகிதம் என வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது வருங்கால வைப்பு நிதிக்  கணக்குகளில் குறைந்தபட்சமாக 500 ரூபாய் எனவும், அதிகபட்சமாகவும் 1.5 லட்சம் ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டு அதனை ஒரு நிதியாண்டில் செலுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், வைப்புத் தொகையை அதிகளவில் ஒரே தவணையாகவும், சிறுக சிறுக பல தவணைகளாகவும் செலுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.