OWN Vs Rent House: வீடு வாங்குவது அல்லது வாடகைக்கு வீடு எடுப்பது இரண்டில் எதில் உங்களது பணத்தை முதலீடு செய்யலாம்? என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement


சொந்த வீடு Vs வாடகை வீடு:


சொந்தமாக வீடு வாங்கலாமா? அல்லது வாடகைக்கு வீடு எடுத்து தங்கிக் கொள்ளலாமா?  என்ற கேள்வியில் மக்கள் அடிக்கடி சிக்கிக் கொள்கிறார்கள். வீடு வாங்குவதற்கு அல்லது வாடகைக்கு தங்கி மிச்சப்படுத்தும் பணத்தை வேறு எங்காவது முதலீடு செய்வது போன்ற ஆப்ஷன்கள் குறித்து நாம் கட்டாயம் சிந்திக்க வேண்டும். அத்தகைய சூழலில் நாம் கவனத்தில் வைத்திருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். 



குடியிருப்பு சொத்துகளுக்கான தேவை:


சமீபகாலமாக வெளியாகும் செய்திகள், சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆவல் மக்களிடையே அதிகரித்து வருவதை காட்டுக்கிறது.  கடந்த ஆண்டு, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான தரவுகளின்படி, நாட்டின் 13 பெரிய நகரங்களில் குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 7 சதவீதம் அதிகரிப்பைக் காட்டுகிறது. அதேசமயம் வாடகைக்கு வீடுகள் எடுப்பது ஆண்டுக்கு ஆண்டு 3.1 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.


வாடகை வீட்டில் ஆர்வம் காட்டாத மக்கள்:


பெங்களூரு போன்ற ஒரு நகரத்தில், ஒவ்வொரு காலாண்டிலும் குடியிருப்பு சொத்துகளுக்கான தேவை 18.2 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பதற்கான தேவை 2.8 சதவிகிதம் குறைந்துள்ளது. டெல்லி, மும்பை போன்ற நகரங்களிலும் இதே நிலைதான். சொந்த வீடு வாங்கவே மக்களிடையே போட்டி நிலவுகிறது. ஒப்பிடுகையில், வீடுகளை வாடகைக்கு எடுப்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. 


வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை?


வீடு வாங்குவது குறித்து பேசிய பெல்வெடெர் அசோசியேட்ஸ் எல்எல்பியை சேர்ந்த ஆஷிஷ் படியார், ”வாடகைக்கு வீடு எடுப்பதா அல்லது வாங்குவது சிறந்ததா என்பதற்கு உறுதியான பதில் இல்லை. இருப்பினும், உலகம் முழுவதும் உள்ள போக்குகள் மற்றும் நமது சொந்த சந்தையை பகுப்பாய்வு செய்த பிறகு, வீடுகளை வாங்குவதற்கான தேவை மக்களிடையே அதிகரித்துள்ளது. வாடகை அதிகரித்து வருவதால், சொந்த வீடு வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். முதன்முறையாக வீடு வாங்குபவர்கள் வீட்டுக் கடனின் உதவியைப் பெறுகிறார்கள். இப்போது பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நாட்டில் உள்ள சிறந்த சொத்துகளின் வாடகை வருமானம் சுமார் 3-3.5 சதவிகிதம், வீட்டுக் கடனுக்கான வட்டி 8.25-50 சதவிகிதம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிக வட்டி கொடுத்து வீடு வாங்குவதில் எந்தப் பயனும் இல்லை” என குறிப்பிட்டுள்ளார். 


கவனத்தில் கொள்ள வேண்டிய கணக்கீடுகள்:


மாதாந்திர வாடகையாக நீங்கள் செலுத்தும் தொகை வீட்டுக் கடன் EMI-யின் ஒரு பகுதி மட்டுமே என்பதால், வீடு வாங்குவதற்கு பெரிய கடன் வாங்குவது நல்லதல்ல. வீடு வாங்குவது அல்லது வாடகைக்கு விடுவது சிறந்ததா? இதற்கு, நீங்கள் எவ்வளவு வாடகை செலுத்த வேண்டும், எவ்வளவு மாதாந்திர EMI செலுத்த வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், இரண்டிற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருந்தால், வாடகைக்கு வீடு எடுப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும். ஒரு வீட்டை வாங்கும் போது, ​​கடன் தொகையை குறைந்தபட்சமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில் கடனுக்கான வட்டி அதிகரித்தால், EMI அதிகரிக்கும் மற்றும் பல ஆண்டுகளில் அது உங்கள் சொத்தின் மதிப்பை விட அதிகமாக இருக்கும்.