இது ஸ்டார்ட் அப் கம்பெனிகளின் ஐபிஓக்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் காலம். பேடிஎம், மொபிக்விக் மற்றும் அமெரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனமான ஃப்ரெஷ் வொர்க்ஸ் ஆகியன பொதுமக்களுக்குத் தன் பங்குகளை அண்மையில் பெருவாரியாக விற்பனை செய்துவந்தது. இந்தப் பங்கைத் தனக்கு உரியதாக்கும் நிலையில் அவரது சொத்து மதிப்பும் உயரும். இது போன்ற பொது விநியோகங்களை  வாங்குவதற்கு  ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குப் பரிந்துரைத்து வந்தது. 










டிமாட் கணக்குகளைத் தொடங்க வேண்டும். டிமாட் கணக்கு தொடங்குவதற்கான வழிமுறை என்ன? நீங்கள் முதலில் உங்களுடைய பான் கார்ட் நம்பரை அப்டேட் செய்திருக்க வேண்டும். டிமாட் கணக்குகளைத் தொடங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு தளத்துக்குச் செல்லவேண்டும். 


NSDL: https://www.sebi.gov.in/sebiweb/other/OtherAction.do?doRecognisedFpi=yes&intmId=19
CDSL: https://www.sebi.gov.in/sebiweb/other/OtherAction.do?doRecognisedFpi=yes&intmId=18


உங்கள் டிமாட் அக்கவுண்ட்டுக்கான செக்யூரிட்டி இந்த டிபிக்களிடம்தான் இருக்கும். உங்களுடைய ஆயுள் காப்பீட்டு நிர்வாகம் எந்த டிபியுடன் தொடர்பில் இருக்கிறார்களோ அவர்களிடம் நீங்கள் கணக்கு தொடங்கலாம். 


உங்கள் கணக்கை தொடங்குவதற்குத் தேவையான ஆவணங்கள்: 


புகைப்படம்
பான்கார்ட்
அட்ரெஸ் ப்ரூப்
கேன்சல் செய்யப்பட்ட காசோலை