Paytm Navathri Offer | கேஸ் சிலிண்டர் புக் பண்ணுனா தங்கம்.. Paytm கொடுக்கும் நவராத்திரி ஆஃபர்.. இன்னைக்குத்தான் கடைசி நாள்..

சிலிண்டர் விலை தங்கம்போல் விர்ரென்று ஏறுவதாலேயே எல்பிஜி சிலிண்டர் புக் செய்தால் தங்கம் பரிசாக அறிவித்துள்ளது பேடிஎம் நிறுவனம். நவராத்திரியை ஒட்டி இந்த ஆஃபரை பேடி எம் அறிவித்துள்ளது.

Continues below advertisement

சிலிண்டர் விலை தங்கம்போல் விர்ரென்று ஏறுவதாலேயே எல்பிஜி சிலிண்டர் புக் செய்தால் தங்கம் பரிசாக அறிவித்துள்ளது பேடிஎம் நிறுவனம். நவராத்திரியை ஒட்டி இந்த ஆஃபரை பேடி எம் அறிவித்துள்ளது.

Continues below advertisement

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.15 உயர்த்தப்பட்டது. டெல்லியில் ஒரு சிலிண்டர் ரூ.899.5க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், நவராத்திரியை முன்னிட்டு, பேடிஎம் நவராத்திரி கோல்ட் என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. எல்பிஜி சிலிண்டர் புக் செய்தால் தங்கம் இலவசம் என்று அறிவித்துள்ளது.

தங்கம் வெல்ல என்ன செய்ய வேண்டும்:

பேடிஎம்மின் நவராத்திரி கோல்ட் திட்டத்தின் கீழ் தங்கம் வெல்ல என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பேடிஎம் பயன்படுத்தி ஒரு கேஸ் சிலிண்டர் புக் செய்ய வேண்டும். அக்டோபர் 7 தொடங்கி அக்டோபர் 16க்குள் புக் செய்ய வேண்டும்.

தினமும் 5 பேருக்கு பரிசு:

இத்திட்டத்தின் கீழ் தினமும் 5 லக்கி வின்னர்களுக்கு பரிசு அளிக்கப்படுகிறது. அதுவும் ரூ.10,001 மதிப்புள்ள 24 கேரட் தங்கம் பரிசாக அளிக்கப்படுகிறது. ஆனால் சிலிண்டரை நிச்சயமாக பேடிஎம் வாயிலாக மட்டுமே புக் செய்ய வேண்டும்.

எப்படி புக் செய்ய வேண்டும்?

* கேஸ் சிலிண்டர் புக் செய்வதற்கான ஆப்ஷனை கிளிக் செய்யவும்
* கேஸ் சர்வீஸ் வழங்குநர், அதாவது இண்டே, ஹெச்பி என உங்க்களின் வழங்குநரை தேர்ந்தெடுங்கள்.
* இப்போது மொபைல் எண்ணை பதிவு செய்யவும். எல்பிஜி ஐடி மற்றும் வாடிக்கையாளர் எண்ணையும் பதிவு செய்யவும்.
* உங்களுக்கு வசதியான பேமென்ட் மோடை தேர்வு செய்யவும்.
* பேடிஎம் வாலட், பேடிஎம் யுபிஐ, கார்டுகள் அல்லது நெட் பேங்கிங்கை தேர்வு செய்து கொள்ளலாம்.
* பேடிஎம் போஸ்ட்பெய்ட் ஆப்ஷன் மூலமாகவும் பேமென்ட் செய்யலாம்.
* நீங்கள் பேமென்ட் செய்தவுடனேயே கேஸ் சிலிண்டர் புக் ஆகிவிடும்


சரி தங்கம் எப்படி கிடைக்கும்?

* பேமென்ட் முடிந்தவுடன் ஸ்க்ராட்ச் கார்டு கிடைக்கும்
* அந்த ஸ்க்ராட்ச் கார்டை தேய்க்க வேண்டும். அடுத்தநாள் தான் அதை தேய்க்க வேண்டும்.
* அப்படிச் செய்தால் உங்களுக்கு தங்கப் பரிசு அடிக்குதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

அக்டோபர் 6-ல் உயர்ந்த விலை:

வணிக பயன்பாடு அல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை கடந்த 6 ஆம் தேதி உயர்ந்தது. டெல்லியில் ரூ.899.5க்கும், கொல்கத்தாவில் ரூ.915.5க்கும், சென்னையில் ரூ.915.5க்கும், மும்பையில் ரூ.899.5க்கும் விற்கப்படுகிறது.

இந்நிலையில் தான் படிகை காலத்தை முன்னிட்டு பேடிஎம் நிருவனம், சிலிண்டருக்கு தங்கம் ஆஃபரை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை ஹெச்பி, இண்டேன், பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம்

Continues below advertisement
Sponsored Links by Taboola