கேரள லாட்டரி பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் செப்டம்பர் 27 அன்று நடைபெறுவதாக இருந்தது. பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் இந்த டிக்கெட் குலுக்கல் நடைபெறும் என்று கேரள லாட்டரித்துறை அறிவித்திருந்தது. இதற்காக கடந்த இரண்டு மாதங்களாக அனல் பறக்க டிக்கெட் விற்பனை நடைபெற்று வந்தது. ரூ.500 விலை கொண்ட இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசு ரூ.25 கோடி என்பதால் லாட்டரி பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அன்றைய தேதியில் லாட்டரி குலுக்கல் நடைபெறாததால் மாற்று தேதியில் குலுக்கல் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில்,
கேரளாவில் இன்று ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெற்றது. ரூ.25 கோடி முதல் பரிசு என்பதால் பலரும் யாருக்கு அடிக்க போகுதோ என எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு குலுக்கல் நடத்தப்பட்டு பரிசு எண் வெளியிடப்பட்டது. இதில் TH 577825 என்ற எண்ணுக்கு முதல் பரிசு ரூ.25 கோடி பரிசு விழுந்துள்ளது.
பரிசு அடித்தால் வாழ்க்கையே செட்டில் ஆகிவிடும் என்பதால் பலரும் தங்கள் டிக்கெட் எண்ணை பார்த்துக்கொண்டு குலுக்கல் முடிவுகளையும் பார்த்து கொண்டு இருந்தனர். சரியாக 2 மணிக்கு குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.25 கோடி TH 577825 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. பாலக்காடில் விற்கப்பட்ட இந்த டிக்கெட்டுக்கு பரிசு விழுந்துள்ளது. ஏஜெண்ட் தங்கராஜன் டி -2356 என்ற எஜென்சியில் விற்கப்பட்டுள்ளது.
ஒரு டிக்கெட்டின் விலை 500 ரூபாய் ஆகும். TA, TB, TC, TD, TE, TG, TH, TJ, TK, TL ஆகிய பத்து சீரிஸ்களிலும் மொத்தம் 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் 75 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி இருந்தன. கேரள லாட்டரி திருவோணம் பம்பர் 2025 பரிசுகள்:
முதல் பரிசு (₹25 கோடி): TH 577825இரண்டாம் பரிசு (₹1 கோடி):
TB 221372, TB 659893, TC 736078, TC 760274, TD 779299, TD 786709, TE 714250, TG 176733, TG 307775, TG 733332, TG 801966, TH 464700, TH 784272, TJ 385619, TK 459300, TL 160572, TL 214600, TL 600657, TL 669675, TL 701213.மூன்றாம் பரிசு (₹50 லட்சம்):
TA 195990, TA 774395, TB 283210, TB 802404, TC 355990, TC 815065, TD 235591, TD 501955, TE 605483, TE 701373, TG 239257, TG 848477, TH 262549, TH 668650, TJ 259992, TJ 768855, TK 482295, TK 530224, TL 270725, TL 669171.நான்காம் பரிசு (₹5 லட்சம்):
TA 610117, TB 510517, TC 551940, TD 150095, TE 807156, TG 527595, TH 704850, TJ 559227, TK 840434, TL 581935.
ஐந்தாம் பரிசு (₹2 லட்சம்). ஆறாம் பரிசு (₹5,000). ஏழாம் பரிசு (₹2,000). எட்டாம் பரிசு (₹1,000). ஒன்பதாம் பரிசு (₹500). ஆறுதல் பரிசு (₹5 லட்சம்) ஆகும்.சட்டவிரோதம்
கேரள லாட்டரிகளை தமிழ்நாட்டில் விற்பனை செய்வது சட்ட விரோதம். தமிழ்நாட்டில் விற்பனை செய்தால் போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்து பரிசு அடித்தாலும் அதற்கு பரிசுத்தொகையை அளிக்க மறுப்பதற்கு கேரள அரசுக்கு உரிமை உண்டு. லாட்டரி டிக்கெட் ஏழை எளிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் தமிழ்நாட்டில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.