கிரிப்டோ கரன்சி உலகில் பெரிதும் அறியப்படாத ஓமைக்ரான் நாணயத்தின் மதிப்பு சுமார் 900 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பில் இது $689 மற்றும் இந்திய மதிப்பீட்டில் இது ரூபாய் 52000. தென்னாப்பிரிககாவில் இருந்து பரவிவரும் புதிய வகை ஓமைக்ரான் வைரஸ் பெயர் இந்த நாணயத்துக்கு இருப்பதன் காரணமாக இந்த கிடுகிடு உயர்வு எனக் கருதப்படுகிறது.  27 நவம்பர் நிலவரப்படி இதன் மதிப்பு வெறும் 65 சதவிகிதம் மட்டுமே இருந்தது. இதற்கிடையேதான் உலக சுகாதார நிறுவனம் 26 நவம்பரில் இந்த புதிய வகைக்கு ஓமைக்ரான் எனப் பெயர் வைத்தது. 






எது எப்படியோ, இந்தியாவில் கிரிப்டோகரன்சியை பணமாக அங்கீகரிக்குஇம் திட்டம் ஏதுமில்லை. கிரிப்டோகரன்சி வர்த்தகம் செய்வது பற்றிய தகவல்களை அரசாங்கம் யோசிப்பதில்லை. கிரிப்டோகரன்சிகள் இந்தியாவில் கட்டுப்படுத்தப்படுகின்றன. ரிசர்வ் வங்கி இதுதொடர்பாக தனது சுற்றறிக்கையை கடந்த மே மாதம் 31-ந் தேதி 2021ல் வெளியிட்டுள்ளது. உங்கள் வாடிக்கையாளர், பணமோசடி தடுப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுதல் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் கட்டுப்பாடுகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்வதற்கான விதிமுறைகளுக்கு ஏற்ப வாடிக்கையாளர் கவனத்துடன் செயல்படும் செயல்முறைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமா அதன் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியது.





பணமோசடிச் சட்டம் 2002ன் வெளிநாட்டுப் பணம் அனுப்புதலுக்கான அந்நதியச் செலவாணி மேலாண்மைச் சட்டத்தின்கீழ் தொடர்புடைய விதிகளுக்கு இணங்குவதை உறுதிசெய்கிறது. என மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது.