இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடந்த ஆண்டு ரூபே கிரெடிட் கார்டுகளை யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸுடன் (யுபிஐ) இணைக்க அனுமதித்தது. இதன் மூலம், தற்போது பயனர்கள் தங்கள் RuPay கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி UPI பரிவர்த்தனைகளை செய்ய முடியும்.


யுபிஐ - கிரெடிட் கார்டு


UPI எனப்படும் விஷயம் வந்தது முதல், கூகுள் பே, போன் பே, பாரத் பே, அமேசான் பே, வாட்சப் பே, பேடிஎம், என பல ஆன்லைன் பேமண்ட் ஆப்கள் முளைத்தன. இதுவரை வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்கு அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி UPI பணத்தை செலுத்தி வந்தனர். இப்போது RuPay கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியும் UPI உடன் இணைத்து பேமெண்ட் செய்ய முடியும் என்ற வசதி வந்துள்ளது. 



உங்கள் RuPay கிரெடிட் கார்டை UPI ஐடியுடன் இணைப்பது எப்படி?


படி – 1 BHIM UPI செயலியை உங்கள் மொபைலில் Google PlayStore அல்லது App Store இலிருந்து பதிவிறக்கவும். உங்களிடம் ஏற்கனவே ஆப் இருந்தால் பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்.


படி – 2 ‘வங்கி கணக்கு’ என்பதைக் கிளிக் செய்து அக்கவுண்டை சேர்க்க 'கூட்டல்' குறியைத் (+) தேர்வு செய்யவும். அதில் வங்கி கணக்கு மற்றும் கிரெடிட் கார்டு ஆகிய இரண்டு விருப்பங்கள் உங்களுக்கு வழங்கப்படும். கிரெடிட் கார்டில் கிளிக் செய்யவும்.


படி – 3 இப்போது நீங்கள் பயன்படுத்தும் கிரெடிட் கார்டை வழங்கிய வங்கியைத் தேர்வு செய்யவும்.


படி - 4 உங்கள் UPI ஐடியுடன் இணைக்க விரும்பும் RuPay கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுத்து, 'Confirm' என்பதைக் கிளிக் செய்யவும்.


படி - 5 பரிவர்த்தனைகளைத் தொடங்க உங்கள் UPI பின்னை அமைக்கவும்.


தொடர்புடைய செய்திகள்: IPL Points table: பூரான் அடித்த அடி, லக்னோ அபார வெற்றி.. மாற்றம் கண்ட ஐபிஎல் பாயிண்ட்ஸ் டேபிள்


UPI மூலம் உங்கள் RuPay கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி எப்படி பணம் செலுத்துவது?


படி – 1 உங்கள் மொபைல் ஃபோனைப் பயன்படுத்தி UPI QR குறியீட்டை ஸ்கேன் செய்து நீங்கள் செலுத்த விரும்பும் தொகையை உள்ளிடவும்.


படி – 2 அதில், உங்கள் RuPay கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுத்து, UPI பின்னை உள்ளிடவும்.


படி – 3 பணம் செலுத்துவது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உங்கள் ட்ரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியை பார்க்கவும்.



RuPay கிரெடிட் கார்டு UPI பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்பு என்ன?


நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) கூற்றுப் படி, இந்த முறையின் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் மற்ற UPI பரிவர்த்தனைகளைப் போலவே பரிமாற்ற வரம்பையும் கொண்டிருக்கும். தற்போது, ஒரு பயனர் UPI மூலம் ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்தை மாற்ற முடியும்.


எந்த RuPay கிரெடிட் கார்டுகளை UPI உடன் இணைக்கலாம்?


பல கடன் வழங்குநர்கள் வாடிக்கையாளர்களை தங்கள் RuPay கிரெடிட் கார்டை UPI உடன் இணைக்க அனுமதிக்கின்றனர். இதில் ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, எச்டிஎஃப்சி வங்கி, இந்தியன் வங்கி, பிஎன்பி நேஷனல் வங்கி, யூனியன் வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை அடங்கும். கிரெடிட் கார்டு வழங்குநரால் வழங்கப்படும் குறைந்தபட்ச கூடுதல் கட்டணம் மற்றும் பிற திட்டங்கள் வேறுபட்டிருக்கலாம் என்பதை கவனத்தில் கொண்டு உங்களுக்கு வேண்டியதை தேர்வு செய்யவும்.