டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான நேரம் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 


டிஜிட்டல் பணபரிவர்த்தனை:


இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டுதான் முதன் முறையாக டிஜிட்டல் பண பரிவத்தனை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய கவர்னர் ரகுராம் ராஜன் இந்த திட்டத்தை துவங்கி வைத்திருந்தார். பொதுவாக பொருட்களை வாங்கவோ அல்லது  பணம் அனுப்பவோ கார்ட் அல்லது வங்கி சேவைகளை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு அறிமுகமான டிஜிட்டல் பணவர்த்தனை ஆரம்பத்தில் விமர்சனங்களை எதிர்க்கொண்டாலும் , அதனை பயன்படுத்தப் கட்டணம் எதுவும் தேவையில்லை  மற்றும் எளிமையாகவும் இருப்பதால் அதனை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக யுபிஐ சேவையை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.



Digital Payments: போன் பே, பேடிஎம்க்கு இனி கட்டணமா? மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?


ஆர்பிஐ அறிக்கையால்  பரபரப்பு :


டிசம்பர் 08, 2021 என தேதியிடப்பட்ட   வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைக் கொள்கைகள் குறித்த  அறிக்கை ஒன்றில் , இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ)  ”Charges in Payment Systems"  (டிஜிட்டல் பணவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் வசூலிப்பது ) என்னும் பொதுமக்கள் கருத்துக்கேட்பு விவாத கட்டுரையை வெளியிட்டிருந்தது. இந்த விவாதக் கட்டுரை ஆகஸ்ட் 17 அன்று வெளியிடப்பட்டது.  இதன் மூலம் யுபிஐ சேவைகளுக்கு கட்டணம் விதிக்க வாய்ப்பிருப்பதாக  பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பணம் செலுத்தும் முறைகளில் முன்மொழியப்பட்ட பல்வேறு மாற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் செய்தி வெளியானதன் எதிரொலியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் , நேற்று ( வெள்ளிக்கிழமை ) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.




நிர்மலா சீதாராமன் கூறியதாவது :


”டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை நாங்கள் மக்களின் பொது நன்மைகளுள் ஒன்றாக பார்க்கிறோம். மக்களுக்கு அது இலவசமாக கிடைக்க வேண்டும் . அதனை அவர்கள் சுதந்திரமாக அணுக வேண்டும் என விரும்புகிறோம்.அப்போதுதான் இந்திய பொருளாதாரத்தில் டிஜிட்டல் மயமாக்கல்  ஈர்ப்பை ஏற்படுத்தும். அதனை வெளிப்படை தன்மையுடன் அனுக விரும்புகிறோம்  ”என்றார். மேலும் பேசிய அவர் “ எனவே, அதை வசூலிக்க இது சரியான நேரம் அல்ல என்று நாங்கள் இன்னும் நினைக்கிறோம். திறந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சிறந்த அணுகலை செயல்படுத்தக்கூடிய தளங்களை  நாங்கள் அதிக அளவில் ஊக்கப்படுத்துகிறோம்.” என தெரிவித்துள்ளார் .