தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி முதல்முறையாக 19,000 புள்ளிகளை கடந்து வர்த்தமானது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,007 புள்ளிகள் உயர்ந்து 63,981 ஆக வர்த்தமாகிறது.அந்நிய முதலீடுகள் அதிகரித்து வருவதன் காரணமாக இந்திய பங்குச்சந்தை வர்த்தகமாகிறது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 945.42 அல்லது 1.50 % புள்ளிகள் அதிகரித்து 63,915.42 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 280.90 அல்லது 1.50 % புள்ளிகள் உயர்ந்து 19,011.25 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
நேற்று(செவ்வாய்க்கிழமை) 62,970 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நிறைவடைந்தது. இன்று(புதன்கிழமை) காலை முதல் ஏற்றத்துடன் வர்த்தகமானது இந்திய பங்குச்சந்தை. பிற்பகல் 1.50 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 1,056.93 புள்ளிகள் அதிகரித்து 64,026.93 புள்ளிகளில் வர்த்தகமானது.. அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 317.45 புள்ளிகள் உயர்ந்து 19,008.65 புள்ளிகளில் இருந்து வருகிறது. இதன் மூலமாக நிஃப்டி முதல்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. கோடாக் பேங்க், ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்டிஎப்சி லைப், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளின் விலை சரிவுடன் வர்த்தமாகின.
மேலும் வாசிக்க.
Panerai Watch: 50 ஆண்டு வாரண்ட்டியாம்.. ஷங்கருக்கு வாட்ச் பரிசளித்த கமல்.. அப்படி என்ன இதுல ஸ்பெஷல்?