Share Marke: இந்திய பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தமாகி வருகிறது.


10:36 மணி நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 15.05  புள்ளிகள் அதிகரித்து 67,810.36  ஆகவும்,  தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 3.00அல்லது 0.015%புள்ளிகள் உயர்ந்து 19,828.60 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின. 


காலை 9.30 மணி நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 80.87 அல்லது 0.0026 % புள்ளிகள் சரிந்து 66,979.36  ஆகவும்,  தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 32.40 அல்லது 0.16%புள்ளிகள் குறைந்து 19,800.80 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின. 


வர்த்தம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாக தொடங்கியது. 66 ஆயிரம் புள்ளிகளாக இருந்த செக்செக்ஸ், மீண்டும் 67  ஆயிரம் புள்ளிகளாக உயர்ந்தது. சென்செக்ஸ் 67,010 ஆகவும், நிஃப்டி 19,811 அகவும் வர்த்தகமானது.


வர்த்த நேரத்தின் காலை 10:32 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 67,088 ஆகவும். நிஃப்டி 22.20 புள்ளிகள் சரிந்து 19,837.05 ஆக வர்த்தாமாகிறது. பங்குச்சந்தை லாபத்துடன் வர்த்தமாகியது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக முதலீட்டாளர்கள், வெளிநாட்டில் இருந்து முதலீடுகள் அதிகம் வருவதால் சென்செக்ஸ் 66 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தமாகி வருகிறது.


கடந்த இரண்டு வாரங்களாக சென்செக்ஸ் 66 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமானது. அமெரிக்க பங்குச்சந்தைகள் நேற்று பாசிட்டிவாக நிறைவடைந்தது. இன்ஃபோசிஸ்,ஹெச்.சி.எல். தொழில்நுட்பம், அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா கன்சல்டன்சி சர்வீஸ், பஜார்ஜ் ஃபினான்ஸ், நெஸ்டே ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிவுடன் வர்த்தகமாகியது. பாரத் ஸ்டேட் வங்கி ,சன் பார்மா, ஐ.சி.சி.ஐ. வங்கி, இந்தஸ்லேண்ட் வங்கி ஆகியவை லாபத்துடன் இருந்தன.


லாபத்துடன் வர்த்தகமாகி வரும் நிறுவனங்கள்:


டாக்டர்.ரெட்டி லேப்ஸ், சன் பார்மா, சிப்ளா, ஐ.டி.சி. ஹிண்டால்கோ, பாரத ஸ்டேட் வங்கி, டிவிஸ் லேப்ஸ், அப்பல்லோ மருத்துவமனை, ஹெச்.யு.எல்., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, மாருது சுசூகி, பவர்கிரிட் கார்ப், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ்,பஜார்ஜ் ஆட்டோ, என்.டி.பி.சி., ஹெச்.டி.எஃப்.சி. வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகியது. 


நஷ்டத்தில் வர்த்தகமான நிறுவனங்கள்:


ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்.சி.எல்., ஹீரோ மோட்டர்கார்ப், லார்சன், பஜார்ஜ் ஃபின்சர்வ், டி,சி.எஸ், டைட்டன் கம்பெனி, ஈச்சர் மோட்டர்ஸ், விர்போ, நெஸ்லே உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகியது.